- Advertisement -

அடேங்கப்பா, ஆப்கானிஸ்தான் ஜெயிப்பதற்காக குல்பதீன் போட்ட நாடகம்.. வசமாய் சிக்கிய ரஷீத் கான்..

டி 20 உலக கோப்பைத் தொடரில் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்று தான் தற்போது நடந்து முடிந்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் க்ரூப் 1ல் இருந்து இந்தியா மட்டும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என 3 அணிகளுக்கும் அடுத்து சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்து வந்தது.

இதற்கு மத்தியில் தான் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அவர்கள் ஆஸ்திரேலிய அணியை வெளியே அனுப்பி விட்டு அரையிறுதிக்கு முன்னேறி விடலாம். ஆனால், மறுபுறம் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கும் இலக்கை 12. 1 ஓவரில் எட்டிப்பிடித்தால் இந்தியாவுடன் அவர்களும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

அப்படி ஒரு சூழலில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி பெரிய சவாலான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தால் மிக நிதானமாக ஆடி ரன் சேர்த்தப்படி இருந்தது. முதல் விக்கெட்டிற்கு 11 வது ஓவர் வரை 59 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டும் சேர்த்திருந்தது.

இதனால், 12.1 ஓவரில் வங்காளதேச அணி 116 ரன்களை எடுத்து விட்டால் ஆஸ்திரேலியாவுக்கு முன்பாக அவர்களால் அரையிறுதிக்கு முன்னேறி விடலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால், இதற்கு மத்தியில் மழை அவ்வப்போது குறுக்கிட, இரு அணி வீரர்களும் பதற்றம் அடைந்தனர். அதே வேளையில், வங்காளதேச அணியின் தொடக்க வீரரான லிட்டன் தாஸ் மட்டும் நிலைத்து நின்று ரன் சேர்க்க, மற்ற யாருமே சிறப்பாக ஆடவில்லை.

- Advertisement -

இதனால், வரிசையாக விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி, 92 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு மத்தியில் மழை குறுக்கிட்டு கொண்டே இருக்க, 19 ஓவரில் வங்காளதேச அணி 114 ரன்கள் வேண்டுமென்ற நிலை உருவானது. இறுதியில், 18 வது ஓவரில் வங்காளதேச அணி 105 ரன்களில் ஆல் அவுட்டாக, 8 ரன்னில் வெற்றி பெற்று முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

இதனிடையே, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதீன் நயீப் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மழை பெய்து போட்டி நின்றால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலை இருந்தது. அந்த சமயத்தில், ஸ்லிப்பில் நின்ற குல்பதீன் நயீப், வேண்டுமென்ற கீழே விழுந்தது போல செய்து காயத்தால் அவதிப்பட்டது போல போட்டியை தாமதமாக்கி இருந்தார்.

இதனால் வெளியேறிய அவர், அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் வந்து பந்து வீசி விக்கெட்டையும் எடுத்திருந்தார். வேண்டுமென்ற ஆப்கானிஸ்தான் வீரர் இப்படி ஒரு நாடகத்தில் ஈடுபட்டது வர்ணனையில் இருந்த ஐயன் பிஷப், சைமன் டால் உள்ளிட்ட பலரையும் கூட அதிருப்தி அடைய வைத்துள்ளது. இந்த செயலுக்காக குல்பதீன் மீது ஐசிசி நடவடிக்கை பாயுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Recent Posts