- Advertisement -
Homeவிளையாட்டுமோசம் செய்ததா பிசிசிஐ? சிறந்த வீரர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு. இவ்ளோ நாள் போராட்டம் வீண் தானா?

மோசம் செய்ததா பிசிசிஐ? சிறந்த வீரர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு. இவ்ளோ நாள் போராட்டம் வீண் தானா?

- Advertisement-

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பொருத்தவரையில் இந்திய அணி பெருமளவு சொதப்பியது என்றே கூறலாம். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் பல மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வுக்குழு தற்போது புஜாராவை அதிரடியாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கி உள்ளது. அதே சமயம் ருதுராஜ், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்று இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிதான் என்றாலும். அந்த இடத்திற்கு தகுதியான வேறு சில வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது தான் ரசிகர்களின் வருத்தமாக உள்ளது. புஜாரா நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது இடத்திற்கு ஹனுமா விஹாரி வந்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் சாதித்த சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற சிறப்பான வீரர்களுக்கும் இதே நிலை தான்.

ஹனுமா விஹாரியை பொறுத்தவரை ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக விளையாடுவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அந்த நிதானம் ஹனுமா விஹாரியின் ஆட்டத்தில் நிச்சயம் இருக்கும். அதன் காரணமாக அவர் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் தான் சர்பராஸ் கானும். இவரும் நிதானமாக விளையாடக்கூடிய ஒரு சிறந்த வீரர் தான். இவர் தனது திறமையை எத்தனையோ முறை நிரூபித்துள்ளார். டான் பிராட்மனுனைத் தொடர்ந்து அதிகப்படியான சராசரியை கைவசம் வைத்திருக்கும் வீரர் இவர் தான். ஆனால் அத்தனை உழைப்பிற்குமான பலன் அவருக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement-

அதேபோல ரஞ்சிக் போட்டிகளின் தொடக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரனுக்கும் இடம் கிடைக்கவில்லை. இவர் ரஞ்சி ட்ரோபி போட்டிகளில் அதிகப்படியான ரன்களை குவித்துள்ளார். இப்படி ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ஜொலிக்கும் வீரர்கள் பலருக்கும் முன்னுரிமை கொடுக்காமல் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.

ருதுராஜை எடுத்துக்கொண்டால் அவர் ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் சிறப்பாக விளையாடினார் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. ஆனால் அவருடைய ரஞ்சி கோப்பை ஆட்டம் ஆனது மேலும் கீழுமாக தான் இருந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் ரஞ்சி ட்ரோபியில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நிலை போய் தற்போது ஐபிஎல் தான் எல்லாமே முடிவு செய்யும் ஒரு களமாக மாறி உள்ளது என்று ரசிகர்கள் தங்கள் வேதனையை பதிவு செய்து வருகின்றனர்.

சற்று முன்