- Advertisement 3-
Homeவிளையாட்டுஜாம்பவான்கள் மத்தியில் என் பெயர்.. இவர் தான் என் ஹீரோ.. வெற்றிக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின்...

ஜாம்பவான்கள் மத்தியில் என் பெயர்.. இவர் தான் என் ஹீரோ.. வெற்றிக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் நெகிழ்ச்சி

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அஸ்வின், தற்போது ஆடி வரும் சில ஆஃப் ஸ்பின்னர்களில் முதலிடத்தில் இருப்பவர். டி20, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என்று அனைத்துவிதமான போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர்.

இருப்பினும் வெளிநாடு ஆடுகளங்களில் அஸ்வினின் பந்துவீச்சை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சந்தேகப் பார்வையுடனே பார்த்து வந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படாததே சிறந்த எடுத்துக்காட்டாகும். இதனால் விரக்தியடைந்த அஸ்வின், இந்திய அணியில் எனக்கு நண்பர்கள் இல்லை என்று வெளிப்படையாக கூறினார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே களமிறங்கிய அவர், மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் வீழ்த்திய 707 விக்கெட்டுகள் என்ற சாதனையையும் அஸ்வின் முறியடித்துள்ளார்.

இந்த சாதனை பற்றி அஸ்வின் பேசும் போது, ஹர்பஜன் சிங் எப்போதும் எனது ஹீரோ தான். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவருக்கு முக்கிய இடமுண்டு. ஏனென்றால் சிறு வயதில் அவரின் ஆக்‌ஷனை தான் அதிகமாக முயற்சித்து பந்துவீசி இருக்கிறேன். அவரின் பெயருடன் சேர்ந்து என் பெயரும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement 2-

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரை மறக்கவே முடியாது. அந்த தொடரில் மட்டும் ஹர்பஜன் சிங் 30க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பார். அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது. இந்த சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் மட்டும் அஸ்வின் ஏராளமான சாதனைகளை தகர்த்துள்ளார். 6வது முறையாக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக வீரர்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டாப் 3ல் இடம்பிடித்தது, 34வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்று சாதனைகளுக்கு மேல் சாதனைகள் படைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்