- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த வருஷம் ஜெயிச்ச டி20 உலக கோப்பைய விட.. 2007 ல நாங்க பண்ண சம்பவம்...

இந்த வருஷம் ஜெயிச்ச டி20 உலக கோப்பைய விட.. 2007 ல நாங்க பண்ண சம்பவம் தான் மாஸ்.. காரணத்துடன் சொன்ன ஹர்பஜன்..

- Advertisement-

1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அடுத்த உலக கோப்பையை நெருங்குவதற்கே 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் டி20 உலக கோப்பை தொடர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தோனி தலைமையில் அதிக அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்கா புறப்பட்டு இருந்தது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றிருந்த தோனியின் படை பல்வேறு சாதனைகளையும் புரிந்திருந்தது.

இதனை தொடர்ந்து 2011 ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்திய அணி வென்று மீண்டும் ஒருமுறை சாதனை படைக்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆனந்த கண்ணீரில் தத்தளித்து இருந்தனர். கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் கடைசி உலக கோப்பை தொடர் என்ற சூழலில், அதனை வெற்றி பெற்ற எமோஷனலான தருணமாக அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகள் இந்திய அணி சிறப்பான அணியாக இருந்து வந்த போதிலும் எந்த உலக கோப்பையையும் அவர்களால் வெல்லவே முடியவில்லை. 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு இருந்ததைவிட தற்போது அதிக பலம் வாய்ந்த அணியாக இருந்த போதிலும் உலக கோப்பை இல்லாமல் இருந்தது இந்திய அணி மீது பெரிய விமர்சனமாக உருவாகியிருந்தது.

அப்படி இருக்கையில் தான் இந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை ரோஹித் தலைமையில் வெற்றி வெற்றி என்று சரித்திரம் படைத்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி. ரோஹித் மற்றும் கோலி முன்னணி வீரர்களான பின்னர் உலக கோப்பை இல்லாமல் இருக்க அதற்கும் தற்போது ஒரு முடிவு கிடைத்துவிட்டது.

- Advertisement-

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கும் இந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்

“நீங்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற அணியை பார்த்தால் எங்களை விட நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள். 2007 ஆம் ஆண்டில் எங்களுக்கு அது புதிய வடிவிலான கிரிக்கெட். டி20 கிரிக்கெட் பற்றி எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. ஒரு வேகத்தில் சென்று நாங்கள் வெற்றி பெற்றிருந்தோம்.

அப்போது எங்கள் அணியில் பெரிய்ய வீரர்களும் இல்லை. யுவராஜ் சிங், சேவாக், நான் மற்றும் அஜித் அகர்கர் தான் தெரிந்தவர்கள். தோனியும் முதல் முறையாக கேப்டன் ஆனார். ஆனால், 2024 ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா என மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள். இவர்களுடன் அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்த்தும் இருந்தனர்.

அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா வரையிலும் பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்டனர். 2024ல் டி20 உலக கோப்பையை வென்ற அனைவருமே மேட்ச் வின்னர்கள். அந்த தொடர் முழுக்க அனைவரும் அபாரமாக செயல்பட்டிருந்தனர்” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

சற்று முன்