- Advertisement 3-
Homeவிளையாட்டுமேக்ஸ்வெல் அதிரடியா ஆடுனாலும் அந்த சிஎஸ்கே வீரர் பந்தை தொட முடியாது.. பந்தயம் கட்டிய ஹர்பஜன்...

மேக்ஸ்வெல் அதிரடியா ஆடுனாலும் அந்த சிஎஸ்கே வீரர் பந்தை தொட முடியாது.. பந்தயம் கட்டிய ஹர்பஜன் சிங்..

- Advertisement 1-

இன்னும் 10 நாட்களில் 17 வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாக உள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் முறையே குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதில், 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை.

இந்த அணிகளில் அதிக பலத்துடன் இருக்கும் ஆர்சிபி அணி, ஒரு சில முறை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த போதிலும் கூட ஏனோ ஐபிஎல் சாம்பியன் என்ற பட்டம் மட்டும் அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அப்படி இருக்கையில் இந்த முறை ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலரும் சமீபத்திய சர்வதேச போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்து வருகின்றனர்.

விராட் கோலி, பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் என ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை படு பயங்கரமாக இருக்க பவுலிங்கும் கைகொடுத்தால், கடந்த 16 வருடமாக எட்டாமல் இருக்கும் கோப்பையை தட்டித் தூக்கி விடலாம் என்று தான் தெரிகிறது. இதற்கிடையில், 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்க உள்ளது.

பெங்களூர் அணியில் எந்த அளவுக்கு பலமான வீரர்கள் இருக்கிறார்களோ, அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா, எம். எஸ். தோனி, ஷிவம் துபே ஆகியோருடன் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் எடுத்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் உள்ளிட்ட வீரர்களும் இணைந்துள்ளது சிஎஸ்கே அணிக்கு பெரிய சாதகமாக இந்த தொடரில் இருக்கும் என்று தான் தெரிகிறது.

- Advertisement 2-

இந்த நிலையில், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ள போட்டி குறித்து முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “நீங்கள் களமிறங்க தொடங்கியது முதலே சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் சிக்ஸர்களை அடிப்பது கடினமாகும். நீங்கள் வந்ததும் சிங்கிள் மற்றும் டபுள்களை எடுத்து ஆட வேண்டும். பத்து பந்துகளிலேயே நீங்கள் பவுண்டரிகளை அடிக்க நினைத்தால் அந்த ஆபத்தான சோனில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவுட்டாகலாம்.

அதனால், சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில் மேக்ஸ்வெல்லை விட பந்து வீச்சாளர் ஜடேஜா தான் அதிக பலத்துடன் இருப்பார் என நினைக்கிறேன். அதே நேரத்தில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடி சேப்பாக்கம் மைதானத்தில் தடைகள் தாண்டி மேக்ஸ்வெல் நின்று விட்டால், அவரை கட்டுப்படுத்துவதே கடினம். இதனால் யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சற்று முன்