- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலியால அத மட்டும் இன்னும் பண்ணவே முடியல.. ஜீரணிக்க முடியாமல் புலம்பிய ஹர்பஜன் சிங்..

கோலியால அத மட்டும் இன்னும் பண்ணவே முடியல.. ஜீரணிக்க முடியாமல் புலம்பிய ஹர்பஜன் சிங்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் நம்பர் ஒன் வீரராக இருந்து வருபவர் தான் விராட் கோலி. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்ததன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போயிருந்தது. இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்த கோலி, அடுத்ததாக ஐபிஎல் தொடருக்காகவும் தயாராகி வருகிறார்.

கடந்த 16 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற ஒரே அணியில் ஆடிவரும் விராட் கோலி இத்தனை சீசன்கள் ஆடி அதே அர்ப்பணிப்புடன் மீண்டும் ஒருமுறை களமிறங்க உள்ளார். அதிலும் இந்த சீசனின் முதல் போட்டியே பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது என்பதே ரசிகர்களுக்கு மிகுந்த ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக அளவில் ரன்களை கோலி குவிக்கவில்லை என்றாலும் இந்த முறை அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பட்டையை கிளப்புவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோலிக்கு நடைபெறாமல் இருக்கும் ஒரு விஷயத்தை தன்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

“அடுத்ததாக ஐபிஎல் போட்டியும் அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரும் வரவுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் விராட் கோலியால் முடியாத ஒரு வேலை ஒன்று இன்னும் பாக்கி இருக்கிறது. விராட் கோலியாக மாறிய பின்னர் அவர் இதுவரை உலக கோப்பையை வென்றது கிடையாது. சீக்குவாக இருந்த போது கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை 22 வயதிலேயே வென்ற அணியில் இடம் பெற்றிருந்தது வேடிக்கையான ஒன்றுதான்.

- Advertisement 2-

ஆனால் அதன் பின்னர் கோலி ஒரு பெரிய வீரராக மாறி 2015, 2019 மற்றும் 2023 ஆண்டுகளில் உலகக் கோப்பை ஆடியும் அவரால் ஒரு கோப்பையை வெல்ல முடியவில்லை. விராட் கோலி போன்ற ஒரு வீரர் உலக கோப்பையை வெல்லாமல் இருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. கோலி எத்தனை சாதனை புரிந்தாலும் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அவரது பசி இன்னும் குறையாது என்று நான் நினைக்கிறேன்.

அனைத்து வீரர்களுக்குமே உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும். ஒரு வீரர் செய்த சாதனைகள் அவர்களுக்கு வேண்டுமானால் நினைவு இருக்கலாம். ஆனால் ரசிகர்கள் அதனை ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நினைவாக இருப்பது என்றுமே கோப்பைகள் மட்டும் தான்” என ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்