எங்க மனச புண்படுத்திடாதீங்க தோனி. இதை நீங்க செஞ்சி தான் ஆகணும். கெஞ்சி கேட்ட ஹர்பஜன் சிங்!

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த சீசனோடு ஓய்வை அறிவிப்பாரா இல்லையா என்பதுதான். இதற்காகவே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் சிஎஸ்கே போட்டிகள் எங்கு நடந்தாலும் தோனிக்காக மஞ்சள் ஆடை அணிந்து வந்து தங்கள் ஆதரவை சிஎஸ்கேவுக்கு தெரிவித்து வருகின்றனர். 41 வயதாகும் தோனி, இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் பேட்டிங்கில் கூட 8 ஆவது பேட்ஸ்மேனாக இறங்குகிறார். சில போட்டிகளுக்கு முன்பு அவரே “என்னால் என்ன முடியுமோ அதை செய்கிறேன். என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள்” என அணியினரிடம் வேண்டுகோளாக வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல் பேசிய ஹர்பஜன் சிங் பின்வருமாறு கூறினார்.

- Advertisement -

“எம்.எஸ். தோனி காலம் நகர்வதையே  நிறுத்திவிட்டார் என்று தோன்றுகிறது. நான் பார்த்த பழைய தோனியைப் போலவே அவர் இப்போதும் இருக்கிறார். அவர் பெரிய ஷாட்களை அடிக்கிறார், அதே சமயம் சிங்கிள்களை எடுக்கிறார். அவர் தனது முழு வேகத்தில் ஓடவில்லை என்றாலும், சிக்ஸர்களை விளாசுகிறார். அதன் காரணமாக இன்னும் பேட்டிங்கில் அவர் ஆபத்தானவராகதான் இருக்கிறார். இப்போதைக்கு ஓய்வை அறிவிக்க வேண்டாம் தோனி. அது எங்கள் மனதை நோகடித்துவிடும். நீங்கள் தொடர்ந்து இன்னும் ஒரு சீசன் விளையாடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், பொதுவாகவே ஒரு வீரர் தனது கேரியரின் பின்பகுதியை நெருங்கும் போது நிறைய விமர்சனங்கள் எழும். ஆனால் தோனி இந்த சீசனில் அந்த விமர்சனங்களை மழுங்கடித்து தனது அணியை சிறப்பாக வழிநடத்தினார். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் சிஎஸ்கே இருக்க அவர் உதவியிருக்கிறார்.

- Advertisement -

அவரது கேப்டன்சி மட்டுமில்லை, அவர் செய்த கள வியூகங்களும் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட உதவியது. அவர் போட்டியில் பல புத்திசாலித்தனமான நகர்வுகளை செய்தார். ஒரு சிறந்த கேப்டனின் கீழ் ஒரு வீரர் எப்படி புத்துயிர் பெறுகிறார் என்பதற்கு ரஹானே சிறந்த உதாரணம்,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்