- Advertisement -

அப்படி நெனச்சா நீங்க டீம்லயே இருக்காதீங்க.. இது தோனியோட வேலையே தான்.. சரமாரியாக விளாசிய ஹர்பஜன் சிங்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று சிறப்பாக இருந்த நிலையில் தான் லக்னோ அணிக்கு எதிரான அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்திருந்த சென்னை அணி மீண்டும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது.

அப்படி இருக்கையில் தான் தங்களின் அடுத்த லீக் போட்டியில் பஞ்சாப் அணியை மீண்டும் சிஎஸ்கே எதிர்கொண்டிருந்தது. ஏறக்குறைய மூன்று ஐபிஎல் சீசன்களாக பஞ்சாப் அணியை ஒரு போட்டியில் கூட சிஎஸ்கே தோற்கடிக்கவில்லை என்ற சூழலில் அதனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அதே வேளையில் மீண்டும் பஞ்சாப் அணியுடன் தோல்வியடைந்தால் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் சுற்றும் கேள்விக்குறியாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்படி இருக்கையில் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தரம்சலா மைதானத்தில் மோதி இருந்தது. இந்த போட்டியில் ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைய, அவர்கள் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதனிடையே தோனி பற்றி ஹர்பஜன்சிங் செரிவித்துள்ள விமர்சனம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஒன்பதாவது வீரராக ஒரு பந்து வீச்சாளரை போல பேட்டிங்கில் களமிறங்கி இருந்தார். அவருக்கு முன்பாக ஷர்துல் தாக்கூர், சாண்டனர் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை சிஎஸ்கே அணி களமிறக்கிய நிலையில் இதனைத் தான் தற்போது ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

- Advertisement -

“ஒன்பதாவது வீரராக தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவர் இந்த போட்டியில் களமிறங்கவே கூடாது. அப்படி இருக்கையில் அவருக்கு பதிலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை ஆடும் லெவனில் இடம்பெறச் செய்யலாம். தோனியே அணியின் முடிவுகளை தீர்மானிப்பதாக இருந்ததுடன் பேட்டிங் வராமல் இருந்து அணியையும் அவர் கீழே இறக்கி உள்ளார். தோனிக்கு முன்பாக ஷர்துல் தாக்கூர் பேட்டிங் ஆட வருகிறார்.

தோனியை போல அவரால் ஒரு பந்தை கூட அடிக்க முடியாது. இருந்தும் தோனி இப்படி ஒரு தவறை ஏன் செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை. தோனிக்கு தெரியாமல் அனுமதியின்றி எதுவும் நடக்காது. இதனால் அவரது பேட்டிங்கையும் கீழே இறக்கும் முடிவை யாரோ எடுத்தார்கள் என்பதை நம்புவதற்கு நான் தயாராக இல்லை.

சிஎஸ்கே அணிக்கு வேகமாக ரன் தேவைப்படும்போது பல போட்டிகளில் தோனி முதலில் இறங்கி அதை செய்துள்ளார். அப்படி இருந்தும் பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தோனி இப்படி செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. சிஎஸ்கே அணி ஜெயித்திருந்தாலும் நான் இதை தவறு என்று தான் கூறுவேன். என் மனதில் எது சரி படுகிறதோ அதுதான் நான் சொல்வேன்” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

Recent Posts