- Advertisement 3-
Homeவிளையாட்டுரோகித்த இல்ல, இவர் கிட்ட அந்த பப்பு வேகாது... இவர் இருக்கும் பார்முக்கு ஷாகின் அப்ரிடி...

ரோகித்த இல்ல, இவர் கிட்ட அந்த பப்பு வேகாது… இவர் இருக்கும் பார்முக்கு ஷாகின் அப்ரிடி பந்து வீசலாம் வேலைக்கே ஆகாது – ஹர்பஜன் சிங் பேச்சு

- Advertisement 1-

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தான் சர்வதேச கிரிக்கெட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இன்னும் சில மணி நேரங்களில் ஆட்டம் தொடங்கவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை மிரட்டலான ஃபார்மில் இருந்தாலும், பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் எந்த நேரத்தில் ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரர்களாக உள்ளனர்.

பவர் பிளே ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியின் இடதுகை பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி சில விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் கூட இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் தான். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் இடதுகை பவுலர்களை எதிர்கொள்ள திணறுவார்கள்.

ஆசிய கோப்பை தொடரிலேயே இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை காலி செய்து அதிர்ச்சியளித்தார். இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஷாகின் அப்ரிடியை மட்டும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி கடந்த 7 போட்டிகளுக்கும் மேலாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களிலேயே பெரிதாக எதையும் செய்யவில்லை. ஷாகின் அப்ரிடிக்கு ஆடுகளத்தின் உதவி அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.

- Advertisement 2-

ஆடுகளத்தின் உதவி இல்லையென்றால் ஷாகின் அப்ரிடியால் எதையும் செய்ய முடியாது. இதுவரை ஆடுகளத்தின் உதவியின் காரணமாக தான் அவர் விக்கெட்டை வீழ்த்தி அபாயகரமான வீரராக இருந்துள்ளார். ஆனால் ஆடுகளத்தின் உதவி இல்லையென்றால் அவர் மற்றொரு சாதாரணமாக பவுலர் தான்

அதே போல ஷாகின் அப்ரிடி மற்றும் கோலிக்கு இடையே போர் இருக்கலாம். ஆனால் கோலி இருக்கும் பார்மில் அவர் தான் இதில் வெற்றிபெறுவார். ஷாகின் பெரும்பாலும் LBW எடுக்க முயற்சிப்பார் அல்லது புதிய பந்தில் நன்கு பிட்ச் செய்து பந்து வீசுவார். ஆனாலும் விராட் கோலிக்கு தான் இந்த பனிப்போர் சாதகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் ஷாகின் அப்ரிடி விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் மொத்தமாக சேர்த்து 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதனால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சற்று முன்