- Advertisement -
Homeவிளையாட்டுதோனி பத்தி பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பதிவு.. பார்த்ததும் பொங்கி எழுந்த ஹர்பஜன் சிங்.. என்ன நடந்தது?..

தோனி பத்தி பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பதிவு.. பார்த்ததும் பொங்கி எழுந்த ஹர்பஜன் சிங்.. என்ன நடந்தது?..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி கண்ட தலை சிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்களில் ஒருவர் தான் எம். எஸ். தோனி. இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலான போதிலும் இன்றும் அடிக்கடி டிரெண்டிங் இருக்கக்கூடிய முக்கியமான கிரிக்கெட் வீரராகவும் அவர் இருந்து வருகிறார்.

ஆண்டுக்கு ஒருமுறை ஐபிஎல் தொடரில் மட்டும் இரண்டு மாதங்கள் ஆடி வரும் தோனியின் பெயரில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். இன்னும் ஒரு சில சீசன்களுடன் தனது ஓய்வினை ஐபிஎல் தொடரில் இருந்தும் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தோனி தொடர்பாக ஏதாவது ஒரு செய்தி நிச்சயம் தொடர்ந்து இணையத்தில் வைரலாகிக் கொண்டே தான் இருக்கும்.

அந்த அளவுக்கு மாஸான வீரராகவும் தோனி வலம் வரும் நிலையில் சமீபத்தில் அம்பானியின் மகனின் திருமணத்தில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தற்போது பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தோனி பற்றி கூறிய கருத்திற்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கொடுத்த பதிலடி தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் நிருபர் ஒருவர் எம். எஸ். தோனி மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து யார் இதில் சிறந்த வீரர் என்ற கேள்வியை எழுப்பி, ரசிகர்களின் கருத்தை தெரிவிக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement-

இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை தெரிவித்து வர இதனை கவனித்த ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததுடன், “இப்போது எல்லாம் நீங்கள் என்ன புகைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி இது. இவருக்கு சொல்லி புரிய வையுங்கள். முகமது ரிஸ்வானை விட தோனி எவ்வளவோ தூரத்தில் இருக்கிறார்.

நீங்கள் ரிஸ்வானிடம் கேட்டால் கூட அவர் நேர்மையான பதிலை தான் கூறுவார். சிறந்த வீரரான முகமது ரிஸ்வானை எனக்கும் பிடிக்கும். நல்ல நோக்கத்துடன் அவர் ஆடி வரும் நிலையில் இந்த ஒப்பீடு தான் தவறானது. இன்றும் தோனி உலக கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் வீரராக இருக்கிறார். அவரை விட ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் யாரும் இருக்க முடியாது” என தரமான பதிலடியை ஹர்பஜன் சிங் கொடுத்துள்ளார்.

சற்று முன்