- Advertisement -
Homeவிளையாட்டுகுவியல் குவியலா விக்கெட்ட எடுக்கறாரு, சிக்சா விலாசறாரு. இவர் கிட்ட நீங்க ஜாக்கிரதையா இல்லாட்டி அவளோ...

குவியல் குவியலா விக்கெட்ட எடுக்கறாரு, சிக்சா விலாசறாரு. இவர் கிட்ட நீங்க ஜாக்கிரதையா இல்லாட்டி அவளோ தான். மும்பை அணிக்கு ஹர்பஜன் கொடுத்த எச்சரிக்கை.

- Advertisement-

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் சில போட்டிகளில் சொதப்பினாலும், பின்பு சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்தது. முதல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த போட்டியில் வென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான பைனலில் ஞாயிற்றுக் கிழமை பைனலில் விளையாடும். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்பஜன் சிங் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ஷமி குறித்த அவரது பேச்சில் “இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்புகளோடு ஷமி உள்ளார். முகமது ஷமி  போன்ற ஒரு பவுலர் தங்கள் அணிக்கு வேண்டும் என ஒவ்வொரு அணியும் ஆசைப்படும். புதிய பந்து வீசும் போது அவர் அபாயகரமான பந்து வீச்சாளர்.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவரின் ஸ்விங் மற்றும் யார்க்கர் பற்றி கூறுகையில் “டெத் ஓவர்களில் விரைவான யார்க்கர்களை வீசுவார். அவர் சிறந்த சீம் பொசிஷனைக் கொண்டவர் மற்றும் விக்கெட்டில் ஸ்விங் இருக்கும்போது அவர் பேட்ஸ்மேன்களால் விளையாட முடியாத பந்துவீச்சாளராக மாறிவிடுவார்” என்று ஹர்பஜன் எச்சரிக்கும் விதமாகக் கூறியுள்ளார்.

- Advertisement-

மற்றொரு குஜராத் வீரரான ரஷீத் கான் பற்றி கூறுகையில் “ரஷித் கான் வித்தியாசமான ஒரு பவுலர். குவியல் குவியலாக விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், சிக்ஸர்களாக விளாசி ரன்களைக் குவிக்கிறார், அதே போல துதோட்டாவை போல சீறிப்பாயும் பீல்டர் ஆவார், கேப்டன் ஹர்திக் இல்லாத போதெல்லாம் அணியை வழிநடத்தும் அளவுக்கு திறன் படைத்தவர்.” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: அந்த பாட்ட நான் எவியா லைக் பண்ணிட்டன். அத போடுங்க என கேட்ட ஜடேஜா. ஸ்டேடியத்தில் ஒலித்த சூப்பர் தமிழ் பாட்டு. வைப் ஆன ரசிகர்கள்

மேலும் ரஷீத்தின் பன்முகத் திறமை குறித்து அவர் பேசுகையில்“அவர் எல்லாவற்றையும் செய்து சிறப்பாக செயல்படும் ஒரு வீரர். ரஷீத் போன்ற ஒரு வீரரை அவர்களின் அணியில் வைத்திருக்கும் அதிர்ஷ்டம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருக்கிறது.” என்று முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

சற்று முன்