நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும். விதி அவர்கள் கோப்பையை வாங்கணும்னு இருக்கு. கடவுள் அனுகிரகம் எனக்கும் இருக்கு – ஹர்திக் பாண்டியா பேச்சு

- Advertisement -

நேற்று நடந்த ஐபிஎல் 16 ஆவது சீசன் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சனின் அபாரமான 96 ரன்கள் இன்னிங்ஸ் உதவியுடன் 4 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் களமிறங்கி ஆடிய சிஎஸ்கே அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி அதிரடியில் இறங்கியது. ஈரப்பதம் காரணமாக குஜராத் பவுலர்களால் பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை. அது சென்னை அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டெவோன் கான்வே மற்றும் ருத்துராஜ் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் அவர்கள் விக்கெட் இழந்ததும் சென்னை அணியின் பேட்டிங்கில் சிறு தடுமாற்றம் இருந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்ததால் கடைசி வரை பரபரப்பாக ஆட்டம் சென்றது. ஒரு கட்டத்தில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற சூழலில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்ஸரும், ஆறாவது பந்தில் பவுண்டரியும் விளாசி அணியை வெற்றி பெறச்செய்து, அணி, ஐந்தாவது முறையாக கோப்பையைக் கைகளில் ஏந்த உதவினார்.

இந்த போட்டி முடிந்ததும் பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, தங்களை விட சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியதாக புகழ்ந்து பேசினார். அவரது பேச்சில் “ நாங்கள் இதயம் சொல்படி கேட்டு விளையாடினோம். நாங்கள் தொடர்ந்து போராடிய விதத்தில் பெருமைப்படுகிறோம். எங்களிடம் ஒரு குறிக்கோள் உள்ளது – நாங்கள் ஒன்றாக அணியாக இணைந்து வெல்வோம் அல்லது ஒன்றாக தோற்போம். நான் எந்த சாக்கு போக்கும் சொல்லப் போவதில்லை, சிஎஸ்கே எங்களை விட சிறப்பாக விளையாடியது.

- Advertisement -

நாங்கள் நன்றாக பேட் செய்தோம், சாய்க்கு (சுதர்சன்) தனி வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் இந்த அளவில் சிறப்பாக விளையாடுவது எளிதல்ல. நாங்கள் வீரர்களை ஆதரித்து, அவர்களிடமிருந்து சிறந்ததைப் பெறுவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம். மோஹித், ரஷித், ஷமி அனைவரும் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

இதையும் படிக்கலாமே: கண்கள் முழுக்க கண்ணீர் தேங்கியது. இது தான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். ஆனால் கஷ்டப்பட்டாவது நான் இதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறன். தோனி பேச்சு

தோனிக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  இதை விதிதான் எழுதியுள்ளது என்பேன். நான் யாரிடமாவது தோற்க வேண்டும் என்றால், தோனியிடம் தோற்பதை விரும்புவேன். நல்லவர்களுக்கு நல்லது நடக்கும், எனக்கு தெரிந்த சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். கடவுள் அவர் மேல் கருணை காட்டியுள்ளார். கடவுள் என்னிடமும் கருணை காட்டியுள்ளார், ஆனால் இன்று அவருடைய இரவாக அமைந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்