தோனியை நான் தோனியாவே பாக்கறது கெடையாது. என்ன பொறுத்தவர அவர் இப்படி தான் – ஹர்திக் பாண்டியா அதிரடி பேச்சு

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரோடு சர்வதேகக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகினாலும், ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது 41 வயதாகும் தோனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வை அறிவிப்பாரா இல்லையா என்பதுதான். அதனால்தான் சென்னை சேப்பாக்கம் மட்டுமில்லாமல் அனைத்து மைதானங்களையும் தோனிக்கு ஆதரவாக மஞ்சள் படை ஆக்கிரமித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தோனியைப் பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனும் தற்போதைய இந்திய டி 20 அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யா வியந்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் பாண்ட்யா கூறிய தகவல்கள் பின்வருமாறு.

“நிறைய பேர் தோனி மிகவும் சீரியஸ் ஆனவர் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படியில்லை. நான்  அவரிடம் நகைச்சுவையாகப் பேசுவேன், அவரை மகேந்திர சிங் தோனியாக நான் பார்க்கவில்லை. என்னுடைய பிரியத்துக்குரிய ஒரு நண்பராகதான் பார்க்கிறேன். வெளிப்படையாக, நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

- Advertisement -

நான் அவரிடம் அதிகமாக பேசாமல் அவரைப் பார்த்தே நிறைய நேர்மறையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, அவர் என் அன்பான நண்பர், அன்பான சகோதரர். நான் அவருடன் மகிழ்ச்சியாக பேசுவேன். நிறைய பிராங்க் செய்து விளையாடுவேன். நான் எப்போதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இருப்பேன்.

இதையும் படிக்கலாமே: சி.எஸ்.கே மேட்ச்கு டிக்கெட் வாங்காதீங்க. தல தோனி ஓய்வை அறிவித்தால் நிலமையே மாறும். இத செய்றது தான் பெஸ்ட் – ஆனந்த் சீனிவாசன்

நீங்கள் தோனியை வெறுக்க வேண்டுமென்றால் ஒரு பேயாகதான் இருக்கவேண்டும்.” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களுடைய அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்