- Advertisement -
Homeவிளையாட்டுஅவருக்கு எதிரா கொஞ்சம் பிசிறு தட்டினாலும் ஜோலி முடிஞ்சுடும். ஹர்திக் பாண்ட்யா கருத்து!

அவருக்கு எதிரா கொஞ்சம் பிசிறு தட்டினாலும் ஜோலி முடிஞ்சுடும். ஹர்திக் பாண்ட்யா கருத்து!

- Advertisement-

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 219 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 8 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் மிகப்பெரிய ரன் மார்ஜின் வித்தியாசத்தில் தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத விதமாக குறுக்கே புகுந்த ரஷீத் கான் 10 சிக்ஸர்கள் உள்பட 32 பந்துகளில் 79 ரன்களை விளாசி 191 ரன்கள் என்ற ஸ்கோருக்கு அழைத்து சென்றார். ஐபிஎல் தொடரில் 8 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் அவர் பவுலிங்கிலும் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

போட்டி முடிந்ததும் பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சூர்யகுமார் யாதவ் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும் பாராட்டினார். அவரது பேச்சில் “ரஷித் மட்டுமே எங்கள் அணியில் சிறப்பாக விளையாடியதாக உணர்ந்தேன். அவர் பேட்டிங் செய்த விதம், பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது.

இந்த தோல்வியை அதிகம் விளக்க தேவையில்லை. ஒரு அணியாக நாங்கள் போட்டியில் இல்லை. பந்துவீச்சிலும் நாங்கள் மிகவும் மோசமாக இருந்தோம். எங்களிடம் தெளிவான திட்டங்கள் இல்லை அல்லது  இருந்தும் அதை நாங்கள் செயல்படுத்தவில்லை. விக்கெட் மிகவும் தட்டையானது ஆனால் நாங்கள் 25 ரன்கள் கூடுதலாக கொடுத்ததாக உணர்கிறேன்.

- Advertisement-

சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர்களில் ஒருவர். அவரை வீழ்த்த வைத்திருக்கும் திட்டங்களை சரியாக செயல்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் தெளிவாக இருப்பது மிகவும் முக்கியம். என்னால் களத்தை மட்டுமே அமைக்க முடியும். கடைசி 10 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தும் அவர்கள் 129 ரன்கள் எடுத்தார்கள். எங்கள் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தவில்லை.” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்