தோனியோட மூலையும், பௌலர்கள வச்சி அவர் கொடுக்கற ட்விஸ்ட்டும் நம்பள வேற மாதிரி யோசிக்க வச்சிடுது – ஹர்திக் பாண்டியா பேட்டி

- Advertisement -

இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை வென்று லீக் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆனால் நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் தோற்று சென்னை அணிக்கு எதிராக தங்கள் முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று வரும் அணியோடு மோதி, அதில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற சூழலில் உள்ளது அந்த அணி.

இந்த போட்டியில் தோற்ற பின்னர் பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “நாங்கள் கடைசி வரை போட்டியில் இருந்ததாகவே  நினைக்கிறேன், ஆனால் நாங்கள் சில அடிப்படையான பிழைகளை செய்தோம், அது எங்களுக்கு தோல்வியைக் கொடுத்துவிட்டது. எங்களிடம் இருந்த பந்துவீச்சாளர்களை வைத்து பார்க்கும் போது நாங்கள் 15 கூடுதல் ரன்களை விட்டுக் கொடுத்ததாக உணர்கிறேன்.

- Advertisement -

நிறைய விஷயங்களை நாங்கள் சரியாகச் செய்தோம். நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருந்தோம், இடையில் சில ரன்கள் கூடுதலாகக் கொடுத்தோம். இப்போதைக்கு இந்த தோல்வியைப் பற்றி நாங்கள் அதிகமாக சிந்திக்கக் கூடாது என நினைக்கிறேன். பனிப்பொழிவு வரும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் வரவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் இன்னொரு போட்டியில் விளையாட வேண்டும், நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவதை உறுதி செய்ய இன்னும் ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும். இந்த சீசனில் நாங்கள் சிறப்பாகச் செய்த விஷயங்களில் கவனம் செலுத்துவோம். தோனியின் சிறப்பு என்னவென்றால் அவரது மனதாலும், அவர் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதத்தாலும், இலக்கில் அவர் 10 ரன்களைச் சேர்த்து விட்டதைப் போல் உங்களை உணர வைப்பார்.

- Advertisement -

நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம், அவர் சரியான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் 15 ரன்கள் கூடுதலாக கொடுத்தோம். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நாங்கள் சரியான விஷயங்களைச் செய்யவில்லை.

இதையும் படிக்கலாமே: நான் ஒரு மாதிரியானவன், நான் பண்றது எரிச்சலாதான் இருக்கும். களத்துக்கு வெளியவோ உள்ளேயோ, எப்படி இருந்தாலும் நான் சிஎஸ்கே காரன் தான் – தோனி பேச்சு

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றியைப் பெறுவோம். நாளைய போட்டியில் என் சகோதரர் அணி விளையாடுகிறது, அந்த போட்டியைக் காண ஆவலாக உள்ளேன்”. அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், ஞாயிற்றுக் கிழமை சி.எஸ்.கே-வை பைனலில் சந்திப்பது மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்