- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி சிஎஸ்கேல இருக்குறது வரை.. சென்னையின் வெற்றிக்கு சூப்பரான காரணம் சொன்ன ஹர்திக் பாண்டியா..

தோனி சிஎஸ்கேல இருக்குறது வரை.. சென்னையின் வெற்றிக்கு சூப்பரான காரணம் சொன்ன ஹர்திக் பாண்டியா..

- Advertisement 1-

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளால் துவண்டு போகாமல் டெல்லி மற்றும் பெங்களூர் அணியை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி தற்போது சென்னை அணியை தங்களின் ஆறாவது போட்டியில் சந்தித்திருந்தது. ஒரு அணியாக போராடி இருந்த மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் விஸ்வரூபம் எடுத்ததன் காரணமாக அசாதாரணமான வெற்றியையும் அவர்கள் பெற்றிருந்தனர்.

அதிலும் பெங்களூர் அணிக்காக ஏறக்குறைய 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி இருந்த மும்பை அணி அதனை 16 வது ஓவரிலேயே எட்டிப் பிடித்திருந்த சம்பவம் பெங்களூரு அணியை நிலைகுலையவும் வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் அதே உத்வேகத்துடன் சிஎஸ்கே அணியையும் அவர்கள் சந்தித்திருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, ருத்துராஜ், ஷிவம் துபே உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. அதிலும் கடைசி ஓவரில் களமிறங்கியிருந்த தோனி, ஹாட்ரிக் சிக்சர் அடித்திருந்த சம்பவம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் அமைந்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில், தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை களத்தில் நின்ற ரோஹித், சதமடித்திருந்தாலும் மற்ற வீரர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆட தவறியதால் 20 ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். இதற்கு முக்கிய காரணமாக, 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இளம் வீரர் பதிரானாவின் பந்து வீச்சு அமைந்திருந்தது.

இரண்டு தொடர் வெற்றிகளுக்கு பின், மீண்டும் தோல்வி அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இதற்கு பின் பேசுகையில், ”

- Advertisement 2-

“நிச்சயம் இது எட்டக்கூடிய இரு இலக்காக தான் இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணியினர் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் பதிரானாவின் பந்து வீச்சு அனைத்தையும் வேறுபடுத்தி விட்டது. அவர்கள் திட்டங்களை சிறப்பாக வகுத்து அதனை நிறைவேற்றி விட்டனர். அவர்களுக்காக ஸ்டம்பின் பின்னால் ஒருவர் (தோனி) நின்று எது வேலை செய்யும் என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

பதிரானா வருவதற்கு முன்பாக, நாங்கள் இலக்கை எட்டும் சூழல் தான் இருந்தது. அதே போல, துபே வந்த போது எது சிறந்ததாக இருக்குமோ அதனை செயல்படுத்த தான், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. மேலும் இங்கே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச கடினமாக இருந்தது. அடுத்த நான்கு போட்டிகளில் ஸ்மார்ட்டாக நாங்கள் தயாராகும் பட்சத்தில் எங்களின் இலக்கை எட்டுவோம் என நினைக்கிறேன்” என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

சற்று முன்