- Advertisement -

பேட்ல பந்தே படல.. அப்புறம், அவுட் ஆகாம என்ன பண்றது.. அந்த பையன் மட்டும் தான் – ஹர்திக் பாண்டியா..

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போல ஒரு இக்கட்டான சூழலில் தான் தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது. இதுவரை 10 போட்டிகள் ஆடி முடித்துள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக தான் வெற்றி பெற்றுள்ளது.

மற்ற ஏழு போட்டிகளுமே அவர்களுக்கு பெரும் தோல்வியாக அமைய சமீபத்தில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்களாலும் மீண்டு வர முடியவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் அடித்திருந்தது. இஷான் கிஷன், நேஹால் வதேரா மற்றும் டிம் டேவிட் தவிர மற்ற எந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்காததால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தான் இந்த ரன்களையும் அவர்கள் சேர்த்திருந்தனர்.

- Advertisement -

இது எளிய இலக்காக இருந்தபோதிலும் தொடர்ந்து ஆடிய லக்னோவால் அவ்வளவு சீக்கிரம் இதனை தொட்டுவிட முடியவில்லை. பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க கடைசி ஓவர் வரை இந்த போட்டியும் சென்றிருந்தது. வெறும் நான்கு பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடித்திருந்த லக்னோ அணி, புள்ளிப் பட்டியலிலும் 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இன்னும் நான்கு போட்டிகளே மும்பை அணிக்கு மீதம் இருக்கும் நிலையில் தொடர்ந்து நான்கிலுமே வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற இக்கட்டான நிலையும் உருவாகி உள்ளது. இந்த தோல்விக்கு பின் பேசி இந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “ஆரம்பத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தது கடினமானதுடன் எங்களால் போட்டியில் மீண்டு வரவும் முடியவில்லை. அனைத்து அணியிலும் முதல் பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுப்பதால் நாங்கள் அதனை நினைத்து நெருக்கடிக்கு உள்ளாகவில்லை.

- Advertisement -

எப்படியாக இருந்தாலும் நீங்கள் பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்பது தான் முக்கியம். நாங்கள் அப்படி செய்தும் அதை நாங்கள் தவறவிட்டதால் தான் விக்கெட்டுகளை இழந்து இப்படி ஒரு சீசனாகவே எங்களுக்கு அமைந்துவிட்டது. இந்த போட்டியில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. நேஹால் வதேரா கடந்த சீசனை போல இந்த முறையும் நன்றாக ஆடிவருகிறார்.

அணில் நல்ல காம்பினேஷன் அமைந்ததால் தான் அவரால் போட்டியில் ஆட முடியவில்லை. ஆனாலும் அவரது திறமையை பார்க்கும் போது மும்பை அணிக்காக பல ஆண்டுகள் ஆடி இந்திய அணிகளும் விரைவில் ஆடுவார் என தெரிகிறது” என ஹர்திக் கூறினார்.

- Advertisement -

Recent Posts