நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு அணியும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த சீசனில் கௌதம் கம்பீர் ஆலோசராக இருந்து வரும் கொல்கத்தா அணி, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை 12 போட்டிகள் ஆடி முடித்துள்ள கொல்கத்தா அணி, அதில் 9 போட்டிகளில் தற்போது வெற்றி பெற்றுள்ளதுடன் மட்டும் இல்லாமல் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி தங்களின் பலத்தையும் நிரூபித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய ஆண்கள் சமீபத்தில் மோதி இருந்த போட்டி மழை காரணமாக ஆரம்பமாக தாமதமானது. இதன் காரணமாக 16 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது. ஆனால் ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் ஐயர், ரசல், நிதிஷ் ராணா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் ஆடிய மும்பை அணி, 139 ரன்கள் மட்டுமே எடுக்க மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்ததால் கொல்கத்தா அணி முதல் அணியாக பிளே ஆப்பிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த ஹர்திக் பாண்டியா, “ஒரு பேட்டிங் யூனிட்டாக நல்ல அடித்தளத்தை அமைத்தாலும் அதனை தொடர்ந்து செயல்படுத்த முடியாததால் தடுமாறினோம். என்னை பொறுத்தவரையில் இது எட்டிப்பிடிக்கும் வகையிலான இலக்காக தான் இருந்தது.
பிட்ச்சின் சூழலை புரிந்து கொண்டு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் பின்னால் சென்று வந்த பந்துகள், அதிகம் ஈரமாக தான் இருந்தது. அடுத்த போட்டிக்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லை. உள்ளே சென்று போட்டியை ரசித்தபடி நல்ல கிரிக்கெட்டை மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறோம்.
ஆரம்பத்தில் இருந்தே அது மட்டும் தான் என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அதனால், இந்த சீசனில் நல்ல கிரிக்கெட்டை நாங்கள் போதுமான அளவுக்கு கிரிக்கெட் ஆடவில்லை என்ற கருதுகிறேன்” என ஹர்திக் பாண்டியா கூறி உள்ளார்.