- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரு சீசனே தப்பா போய்டுச்சு.. டீமா நாங்க ஸ்மார்ட் கிரிக்கெட் ஆடல.. கடைசி இடம் பிடித்து...

ஒரு சீசனே தப்பா போய்டுச்சு.. டீமா நாங்க ஸ்மார்ட் கிரிக்கெட் ஆடல.. கடைசி இடம் பிடித்து புலம்பிய ஹர்திக்..

- Advertisement 1-

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இந்த லீக் சுற்றில் 14 போட்டிகளை ஆடி முடித்திருந்த நிலையில், அவர்களுக்கு அடுத்தபடியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் தற்போது லீக் போட்டியை ஆடி முடித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு ஏற்கனவே பறிபோன நிலையில், ஒரு ஆறுதல் வெற்றிக்காக தங்களின் கடைசி லீக் போட்டியில் லக்னோ அணியை சந்தித்தது.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் லக்னோ அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில், அப்படி நடைபெறவே வாய்ப்பு குறைவு தான் என்பதை அறிந்து கொண்டு தான் களமிறங்கி இருந்தனர். அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்திருந்தது. பூரான் 75 ரன்கள் எடுக்க, அவரும் ராகுலும் சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப் தான் லக்னோவின் ரன்னுக்கும் காரணமாக இருந்தது.

மற்ற எந்த வீரர்களும் சிறப்பாக ஆடாமல் போக, இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனில் ஒரு சில போட்டிகளை தவிர, மற்ற போட்டிகளில் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் தவித்த ரோஹித் ஷர்மா, இந்த முறை சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். அவர் 38 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து நல்ல ஒரு அடித்தளம் அமைத்து அவுட்டாக, கடைசி 7 ஓவரில் 100 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவானது.

ஆனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த சீசனை தோல்வியுடன் முடித்துக் கொண்டது. மேலும் இந்த தோல்வியின் காரணமாக, புள்ளிப் பட்டியலில் 10 வது இடத்தை 2 வது முறையாக கடைசி 3 சீசன்களில் பிடித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

- Advertisement 2-

கடைசி இடம் பிடித்து வெளியேறியது பற்றி பேசி இருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த தோல்வி கொஞ்சம் கடினமான ஒன்று தான். நிச்சயமாக நாங்கள் குவாலிட்டி கிரிக்கெட்டை ஆடவில்லை. அதுதான் எங்களுக்கு ஒரு சீசனையே இல்லாமல் செய்து விட்டது. எப்போதுமே போட்டிக்காக வெளியே வந்து உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு அணியாக நாங்கள் நிச்சயம் தரமான கிரிக்கெட்டையோ அல்லது ஸ்மார்ட் கிரிக்கெட்டையோ ஆடவில்லை. அதுதான் இந்த சீசனின் முடிவிலும் எங்களுக்கு பிரதிபலித்துள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் என்ன தவறு நடந்தது என்று சொல்வதற்கு அதற்கான நேரம் வரவில்லை என்று நினைக்கிறேன். இந்த ஒட்டு மொத்த சீசனும் தவறாகவே தான் எங்களுக்கு அமைந்துவிட்டது. இந்த போட்டியை விட்டுவிட்டு அடுத்த சீசனில் கவனம் செலுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்