மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்த சீசனில் நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, தலைமையில் லீக் சுற்றிலேயே சொதப்பி இருந்தனர். இதன் காரணமாக, அவர்கள் கடைசி இடம் பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தனர். நல்ல அணியாக இருந்தும் அவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது.
மும்பை அணியின் கேப்டனாக ஒரு பக்கம் விமர்சனத்தை ஹர்திக் பாண்டியா சந்திக்க, டி 20 உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் அதிரடி காட்டி கம்பேக்கை கொடுத்திருந்தார். ஆனால், இன்னொரு பக்கம், ஹர்திக்கும் அவரது மனைவியும் விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்திருந்தது.
கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்வி அடைந்து துவண்டு போன ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அப்படி இருக்கையில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது நடாஷா ஆகியோரின் விவாகரத்து குறித்த செய்தியில் பெரிய ட்விஸ்ட் ஒன்று உருவாகி உள்ளது.
செர்பியா நாட்டை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை தான் நடாஷா ஸ்டான்கோவிச். இவர் நிறைய பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகி இருந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவையும் காதலித்து வந்தார். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடாஷா பங்கேற்று பிரபலமாக, ஹர்திக் பாண்டியாவுடனான நிச்சயதார்த்தமும் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தது.
இதனிடையே, ஹர்திக் பாண்டியாவின் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே, நடாஷாவும் கர்ப்பம் அடைந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடக்க, ஜூலை மாதத்தில் ஹர்திக் – நடாஷா தம்பதியினருக்கு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை ஹர்திக் பாண்டியா செலவழித்து வந்த நிலையில், கணவர் ஆடும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கவும் மைதானத்திற்கே வந்து விடுவார் நடாஷா.
இவர்கள் இருவரும் அன்பான கணவன் மனைவியாக இருந்து வர கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் பிரிய போவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியா பெயரை தனது இன்ஸ்டா கணக்கில் இருந்து நீக்கியதாகவும், ஐபிஎல் போட்டிகளை பார்க்க வராமல் இருந்ததே சிறந்த உதாரணம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இருவரும் பிரியும் அளவுக்கு என்ன பிரச்சனை நடந்திருக்கும் என ரசிகர்கள் குழம்பி போக, அவர்கள் மீண்டும் சேர வேண்டும் என்று தான் விருப்பப்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் ஹர்திக் மற்றும் நடாஷா விவகாரத்தில் ட்விஸ்ட் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, ஹர்திக் பாண்டியாவுடனான திருமண புகைப்படங்களை Archive-ல் இருந்து நடாஷா மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவரின் விவாகரத்து விஷயத்தில் உண்மை இருக்காது என்றும், அனைத்தையும் வதந்தியாக்கி அவர்கள் இணைந்து வாழ வேண்டும் என்பது தான் பலரின் விருப்பமாக உள்ளது.