- Advertisement -
Homeவிளையாட்டுஹர்திக் பாண்டியா, தாக்கூரால்.. ஒரே நேரத்தில் உற்சாகம் அடைந்த மும்பை, சிஎஸ்கே ரசிகர்கள்.. பின்னணி என்ன..

ஹர்திக் பாண்டியா, தாக்கூரால்.. ஒரே நேரத்தில் உற்சாகம் அடைந்த மும்பை, சிஎஸ்கே ரசிகர்கள்.. பின்னணி என்ன..

- Advertisement-

ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலக்கிய இளம் வீரர்களும் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை நிஜமாக்கும் வகையில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பல அணிகள் இளம் வீரர்களை கடும் போட்டி போட்டுக் கொண்டும் எடுத்திருந்தது. மேலும் திறமை இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் பெரிய தாக்கத்தையும் அவர்கள் ஏற்படுத்தி இந்திய அணியிலும் இடம்பிடிக்க முயல்வார்கள் என தெரிகிறது.

இதனிடையே, தற்போது இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் பல இளம் வீரர்கள் எதிரணியில் ஆடும் சீனியர் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஐபிஎல் தொடரில் தங்கள் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சீனியர் வீரர்களும் இந்த டிராபி தொடரில் சிறப்பாக ஆடியும் வருகின்றனர். அந்த வகையில், பரோடா அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார். தமிழ்நாடு அணிக்காக 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை நோக்கி பரோடா அணி ஆடிய போது விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கியும் பயணித்திருந்தனர்.

ஆனால் தனியாளாக போட்டியின் விதியை மாற்றிய ஹர்திக் பாண்டியா, ஒரே ஓவரில் 30 ரன்கள் சேர்த்து தமிழ்நாடு அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். கடைசி பந்தில் அவர்கள் த்ரில் வெற்றியும் பெற, தங்களது க்ரூப்பில் தொடர்ச்சியாக ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாக பரோடா உள்ளது. தமிழ்நாட்டு அணிக்காக அதிரடி காட்டியிருந்த ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் திரிபுராவுக்கு எதிரான போட்டியிலும் சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார்.

- Advertisement-

23 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் சேர்த்திருந்தார் ஹர்திக் பாண்டியா. இதில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை பறக்க விட்டிருந்த ஹர்திக் பாண்டியா, அதில் 28 ரன்களை சேர்த்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் பார்மில் அவர் இருந்து வருவது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ஆனால், அதே வேளையில் சிஎஸ்கே அணி அவரை மீண்டும் எடுக்கவில்லை என பலரும் குறிப்பிட்ட ஷர்துல் தாக்கூர், சையது முஷ்டாக் அலி தொடரில் எந்த பந்து வீச்சாளரும் செய்யாத மோசமான சாதனையை படைத்துள்ளார். கேரளாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனின் விக்கெட்டை எடுத்திருந்த ஷர்துல் தாக்கூர், 4 ஓவர்களில் 69 ரன்களை வாரி வழங்கி இருந்தார்.

இதன் காரணமாக சையது முஷ்டாக் அலி தொடரில் அதிக ரன்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் ஷர்துல் தாக்கூர் படைத்துள்ளார். ஏன் சிஎஸ்கே எடுக்கவில்லை என விமர்சித்த ரசிகர்கள், ஷர்துல் தாக்கூரின் பந்து வீச்சை பார்த்து விட்டு அவர்கள் எடுத்த முடிவு சரிதான் என கூறி வருகின்றனர்.

சற்று முன்