- Advertisement 3-
Homeவிளையாட்டுபிளே ஆப் வாய்ப்பு மிஸ் ஆனாலும்.. முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செஞ்ச தரமான சம்பவம்..

பிளே ஆப் வாய்ப்பு மிஸ் ஆனாலும்.. முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செஞ்ச தரமான சம்பவம்..

- Advertisement 1-

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கதை சில லீக் போட்டிகளுக்கு முன்பாகவே முடிந்து விட்ட நிலையில் அவர்கள் தங்கள் கடைசி லீக் போட்டியை லக்னோ அணிக்கு எதிராக ஆடி வருகின்றனர். அவர்களை எதிர்த்து ஆடும் லக்னோ அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருக்கும் நிலையில் எப்படியாவது மும்பை அணியை வீழ்த்தி நல்ல ரன் ரேட்டை எடுக்க வேண்டும் என்ற வகையில் ஆடி வருகின்றனர்.

அதே வேளையில் இன்னொரு பக்கம் மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேறினாலும் இந்த சீசனின் கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக இறங்கி ஆடி வருகின்றனர். அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதுமட்டுமில்லாமல் மும்பை அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்து வந்த திலக் வர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த கடைசி போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதுடன் மட்டுமல்லாமல் அர்ஜுன் டெண்டுல்கர், நமன் திர் உள்ளிட்ட வீரர்களுக்கும் மும்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் படிக்கல் இந்த தொடர் முழுக்க சொதப்பி வந்த நிலையில் ஒரு மீண்டும் ஒரு முறை அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும் ஏமாற்றத்தை தான் கொடுத்திருந்தார்.

- Advertisement 2-

முதல் பந்திலேயே அவர் அவுட்டாகி நடையைக் கட்ட பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் மற்றும் தீபக் ஹூடாவும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர். ஆனால், பின்னர் வந்த பூரன், அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்க 29 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து அவுட்டாகி இருந்தார். இவரது ரன் குவிப்பால் 200 ரன்களை கடந்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் ஆடி வரும் வேளையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செய்த ஒரு சம்பவத்தை தான் தற்போது பார்க்கப் போகிறோம். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா தான் டாஸ் வென்றிருந்தார். இதன் மூலம், 10 வது முறையாக இந்த சீசனில் டாஸ் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

டாஸ் சாதகமாக அமைந்த போதிலும் இந்த சீசனில் அவர்களால் தொடர் வெற்றிகளை குவித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்