- Advertisement -

மும்பை கேப்டனாக ஹர்திக் பாண்டியா படைத்த வரலாறு.. இத்தனை வருசமா ரோஹித்தால கூட முடியல..

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சந்தித்திருந்தது கொஞ்ச, நஞ்ச விமர்சனங்கள் கிடையாது. ஒவ்வொரு போட்டியிலும் கேப்டனாக உள்ளே அவர் நுழையும் போது அந்த அளவுக்கு எதிர்ப்புகள் இருந்தது. பேட்டிங் செய்ய வந்தாலோ, அல்லது பந்து வீசினாலோ, ஃபீல்டிங் செய்தாலோ கூட ரோஹித்தின் பெயரை ஆர்ப்பரித்து ஹர்திக்கை வெளியே போ என்று சொல்லும் அளவுக்கு ஆவேசமாக தங்களின் எதிர்ப்புகளையும் ரசிகர்கள் நேரடியாக மைதானத்திலேயே காண்பித்திருந்தனர்.

மேலும் இந்த நெருக்கடிக்கு மத்தியில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியாமலும், பந்து வீச முடியாமலும் அணியை வழிநடத்த முடியாமலும் அவதிப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக மும்பை அணியில் இருந்த வீரர்கள் தொடங்கி பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட நிறைய வேண்டுகோளையும் ரசிகர்களுக்கு வைத்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் அது எதையும் குறைத்ததாகவே தெரியவில்லை. தொடர்ந்து ரசிகர்கள் ஹர்திக்கிற்கு எதிரான குரல்களை கொடுத்துக்கொண்டே இருக்க, இவையெல்லாம் தற்போது காதில் போட்டுக்கொள்ளாமல் மிகச்சிறப்பான வழியில் பந்துவீசி வருகிறார் ஹர்திக் பாண்டியா. ஏழு முதல் எட்டு போட்டிகள் வரை ஆடி இருந்த ஹர்திக் பாண்டியா வெறும் நான்கு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்தார்.

ஆனால் தற்போது கடைசியாக அவர் பந்து வீசிய மூன்று போட்டிகளில் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் ஹைதராபாத் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி, மார்க்கோ யான்சன் மற்றும் சபாஷ் அகமது ஆகியோரின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

முன்னதாக டி20 உலக கோப்பை அணி அறிவிக்கப்படுவதன் முன்பு வரை ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு எந்த விதத்திலும் முன்னேறவில்லை. ஆனால் இந்திய அணியில் அவரது பெயர் இணைக்கப்பட்டதும் ஆடிய மூன்று போட்டிகளில் மொத்தமாக ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிக நம்பிக்கையும் அவர் தற்போது கொடுத்துள்ளார்.

அப்படி இருக்கையில் தான் மும்பை அணியின் கேப்டனாக மிக முக்கியமான ஒரு சாதனையை செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதற்கு முன்பாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங், அதிகமாக 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டனாக அதிக விக்கெட் எடுத்வர்கள் பட்டியலில் ஷான் பொல்லாக் 5 விக்கெட்டுகளையும், பொல்லார்ட் மற்றும் ரோஹித் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்து அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர்.

இந்த நிலையில் தான் ஹர்பஜன் சிங்கின் 11 விக்கெட்டுகளை தற்போது ஒரு கேப்டனாக சமன் செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணியின் கேப்டனாக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்குடன் முதலிடத்திலும் தற்போது ஹர்திக் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts