- Advertisement -
Homeவிளையாட்டுகுழப்பத்தில் இருந்த ரோஹித்.. சிங்கம் மாதிரி வந்து நின்ன ஹர்திக்.. சூப்பர் 8 சுற்றில் நடக்க...

குழப்பத்தில் இருந்த ரோஹித்.. சிங்கம் மாதிரி வந்து நின்ன ஹர்திக்.. சூப்பர் 8 சுற்றில் நடக்க போகும் அதிசயம்..

- Advertisement-

டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தாலும் அதே வேளையில் பேட்டிங் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மைதானங்களில் எந்த அணிகளுமே 150 ரன்களை கடப்பதற்கே சிரமமாக பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணிக்கும் அதே நிலை தான் தொடர்ந்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் சூப்பர் 8 போட்டிகளில் நிச்சயம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே போல ரவீந்திர ஜடேஜா இதுவரை நடந்து முடிந்த மூன்று லீக் போட்டிகளில் பெரிதாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் பந்து வீச்சிலும் ஒரு விக்கெட் கூட எடுக்காமல், கேட்ச் எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

இதனால் அவருக்கு பதிலாக வேறொரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்க வேண்டுமென ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படி பாதகங்கள் பல இருந்தாலும் பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். அதிலும் ஐபிஎல் தொடரில் கேப்டன்சி, பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்த ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பையில் தனது அணிக்காக மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி விமர்சனங்களையும் தவிடுபொடி ஆக்கி உள்ளார்.

மூன்று போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள ஹர்திக் பாண்டியா சூப்பர் 8 சுற்றிலும் நிச்சயம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஹர்திக் பாண்டியா குறித்து சில கருத்துக்களை இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“ஹர்திக் பாண்டியா வீசும் லெந்த்கள், இதுபோன்ற சூழல் உள்ள பிட்ச்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் பிட்சிலும் இதேபோல சிறந்த லெந்தில் ஷார்ட் பந்துகளை அவர் வீசினால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ரன் அடிக்கவே கடினமாகத் தான் இருக்கும். இதனால் ஒரு பந்து வீச்சாளராக அவர் ஃபார்மில் இருப்பது மிக மிக முக்கியம்.

பேட்டிங்கும் முக்கியம் என்றாலும் நிச்சயம் தேவைப்படும் நேரத்தில் சூப்பர் 8 போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன். ஆனால் அதைவிட அவர் ஒரு பந்துவீச்சாளராக நல்ல ஃபார்மில் இருப்பது முக்கியம் என நான் சொல்வதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் போன்ற மைதானங்களில் இந்திய அணி ஆடும் போது குல்தீப் யாதவை கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக களமிறங்க வைக்கலாம்.

அப்படி இருக்கும்போது ஹர்திக் பாண்டியாவின் இந்த ஃபார்ம் நிச்சயமாக கூடுதல் ஒரு சுழற்பந்து வீச்சாளரை இந்திய அணியில் இறங்க வழி செய்யும்” என இர்பான் பதான் கூறியுள்ளார். அவர் கூறியது போல சூப்பர் 8 நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு வேண்டும் என்ற சூழல் உள்ளது.

இதனால், ஜடேஜாவை மாற்றிவிட்டு குல்தீப் அல்லது சாஹல் இடம்பெறுவார்களா அல்லது சிராஜ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவரை மாற்றிவிட்டு இடம்பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்