வீடியோ: கிளீன் போல்ட் ஆன பாபர் ஆசாம்… தட்டி தூக்கிய பாண்டியா.. என்ன ஒரு பால் இது

- Advertisement -

இந்த ஆசியக் கோப்பையை பொறுத்தவரை இந்திய அணியின் தேர்வு தொடங்கி பல விடயங்களில் இந்திய அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு ஏற்றார் போல் தான் ஆரம்பத்தில் விளையாடிய சில போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டமும் அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி முதல் போட்டியில் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா சுப்மன் கில் போன்றோர் பெரும் சர்வை சந்தித்தனர்.

அதேபோல் சீனியர் வீரரான கோலியும் சொற்பரன்களில் வெளியேறி இருந்தார். இதெல்லாம் அப்போது மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது .அதற்கு அடுத்து நேபாளிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் பேட்டிங்கில் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். எனினும் பவுலிங் மற்றும் பீல்டிங் அந்த போட்டியில் விமர்சிக்கப்பட்டது என்றே கூற வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ,அணிக்கு சிறப்பான ஒரு துவக்கத்தை வழங்கினர். இதன் காரணமாக இந்திய அணி மிகப்பெரிய ஒரு ஸ்கோரை எட்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

சுப்மன் கில்மற்றும் ரோகித் சர்மா என இருவரும் 50 ரன்கள் கடந்து ஆட்டம் இழக்க, அடுத்து வந்த வீரர்களான கோலி மற்றும் கே.எல் ராகுல் தங்களது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் சேர்த்தனர். இதில் பாகிஸ்தானின் பௌலிங் இந்திய அணிக்கு எதிராக பெரிதும் சோபிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பேட்டிங் விளையாட வந்த பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு சரிவது போல் மலமலவென சரிந்தன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் விக்கெட்டை வீழ்த்த, அடுத்து களத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை கண்டு பிரமித்துப் போனார் என்றே கூற வேண்டும்.

அவர் தட்டு தடுமாறி ஆடி கொண்டிருக்க, பதினோராவது ஓவரை வீச வந்தார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரில் பாபர் அசாம் எதிர்பார்க்காத வகையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி அவரை கிளீன் போல்ட் ஆக்கினார். இதன் காரணமாக பாபர் அசாம் 24 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். அடுத்தடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, எட்டு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

- Advertisement -

சற்று முன்