- Advertisement -

7 மேட்ச்ல 4 விக்கெட்.. இப்ப 2 மேட்ச்ல 4 விக்கெட்.. ஹர்திக் ஃபார்ம் பின்னாடி இருந்த ஜாலியான காரணம்.. இத கவனிக்கலயே..

நடப்பு ஐபிஎல் தொடரில் இனி வரும் ஒவ்வொரு போட்டிகளும் அனைத்து அணிகளுக்குமே வாழ்வா சாவா என்ற வகையில் தான் அமையப்போகிறது என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மற்ற அணிகள் அனைத்துமே ஐந்து முதல் ஆறு போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளனர். இதனால் இனிவரும் போட்டிகள் பட்டாசாய் வெடிக்க போகிறது என்பதால் எந்த அணிகள் பிளே ஆப்பிற்கு முன்னேறும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்புதான் கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி இருந்தது. இப்படி ஒரு சூழலில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 57 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

ஆனால் பின்னர் கைகோர்த்த மணிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பாக ஆடி அந்த அணியின் ஸ்கோரின் ஒரு நல்ல நிலைக்கு எட்ட உதவியதுடன் இதனால் கொல்கத்தா அணி 19. 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதைவிட பரிதாபமான நிலைக்கு சென்று கொண்டிருந்தது. 71 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழக்க, பின்னர் போட்டியும் அவர்களுக்கு சற்று கடினமாக மாறியிருந்தது. இதனால், தோல்வியை தழுவி பிளே ஆப் வாய்ப்பும் அவர்களுக்கு மங்கிப் போனது.

- Advertisement -

இதனிடையே தான் இந்த போட்டியில் நடந்த ஒரு சிறப்பான சம்பவம் பற்றி தற்போது பார்க்கலாம். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ள நிலையில், கடைசியாக அவர் ஆடிய 2 போட்டியில் மொத்தம் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். முன்னதாக இவர் 7 போட்டிகள் ஆடி நான்கு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றிய நிலையில் அதனை தற்போது இரண்டே போட்டிகளிலும் நிறைவேற்றி விட்டார்.

இதனால் இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்றும் பலர் தெரிவித்து வரும் நிலையில் தான் இதில் இவர் விக்கெட் எடுக்க காரணமாக அமைந்தது பற்றி ஒரு ஜாலியான விஷயத்தையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதாவது ஹர்திக் பாண்டியா தனது தலையில் ஒரு பேண்ட் வைத்து பந்து வீசிய 7 போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த ஹெட் பேண்ட் இல்லாமல் பந்து வீசிய இரண்டு போட்டிகளில் மொத்தம் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதனால் பேண்ட் தான் அவர் பிரச்சனை என்ற வேடிக்கையான கருத்தும் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Recent Posts