- Advertisement -
Homeவிளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடர்.. ஹர்திக் பாண்டியாவால் பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்.. இந்திய அணிக்கு ஆபத்து.. என்னத்த...

டி20 உலகக்கோப்பை தொடர்.. ஹர்திக் பாண்டியாவால் பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்.. இந்திய அணிக்கு ஆபத்து.. என்னத்த சொல்றது

- Advertisement-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிவடைந்த பின், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், பிசிசிஐ தரப்பில் ஹர்திக் பாண்டியாவை தலைமையாக கொண்டு இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு கட்டமைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் போது இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கணுக்காலில் ஏற்பட்டது. அதன்பின் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய அவர், தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரையும் மிஸ் செய்துள்ளார்.

இதன் காரணமாக மாற்று கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்திய அணி 13 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகளை ஹர்திக் பாண்டியா தவறவிட்டுள்ளார்.

- Advertisement-

தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரையும் தவறவிட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் தான் ஹர்திக் பாண்டியா நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்திய அணியையும், வீரர்களையும் பற்றி எதுவும் தெரியாமல் ஹர்திக் பாண்டியா நேரடியாக டி20 உலகக்கோப்பையில் கேடன் பொறுப்பை ஏற்கவுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணி முழு நேர கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

சற்று முன்