- Advertisement -
Homeவிளையாட்டுஹர்திக் இருந்தும் மும்பை இந்தியன்ஸ்ல அப்படி நடக்கல.. சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி கிடைக்க காரணமா இருந்த...

ஹர்திக் இருந்தும் மும்பை இந்தியன்ஸ்ல அப்படி நடக்கல.. சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி கிடைக்க காரணமா இருந்த சம்பவம்..

- Advertisement-

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மோதவுள்ள கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் நிலையில், அணியில் தேர்வான வீரர்கள் தற்போது வரை பெரிய வியப்பாக தான் அனைவருக்குமே இருந்து வருகிறது. டி20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா ஓய்வினை அறிவிக்க, இன்னொரு பக்கம் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அவருடைய இடத்தில் ஆல் ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளதால் இனிமேல் ஜடேஜாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்தாலும் அவர் நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு நாள் போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை.

மேலும் டி 20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த ருத்துராஜிற்கும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்து பட்டையைக் கிளப்பிய இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவிற்கும் இலங்கை அணிக்கு எதிராக அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர்களை விட சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ரியன் பராக்கை அணியில் சேர்த்திருந்ததும் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது.

இவை அனைத்தையும் விட வியப்பான விஷயமாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்டியா டி20 அணியில் தேர்வாகியும் அவரை புறந்தள்ளி விட்டு புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்தது தான். இது தொடர்பாக விளக்கம் கொடுத்திருந்த கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர், அடிக்கடி ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்படுவதால் தான் அவரை விட ஃபிட்டாக இருக்கும் சூர்யகுமாருக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

- Advertisement-

ஆனாலும், இதனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத சூழலில், இலங்கை அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரசல் அர்னால்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக தேர்வாகாமல் போனதன் காரணத்தை தெரிவித்துள்ளார்.

“ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே அற்புதமான வீரர்கள். சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக வலம் வருவதுடன் மட்டுமல்லாமல் அவரை போல போட்டியை அறிந்து கொண்டு அதற்கேற்ப ஆடும் வீரர் யாருமே கிடையாது. ஹர்திக்கும் அப்படி ஆடுபவர் தான். ஆனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தன்னை சுற்றி இருந்தவர்களிடம் மரியாதையை சம்பாதிக்க முடியவில்லை.

இதனால் தான் பிசிசிஐ வேறொரு முடிவை எடுத்திருக்கலாம். கேப்டன்சி என்பது அனைவருடனும் ஒன்றிணைந்து மிக அமைதியாக ஒரே பாதையில் அணி வீரர்களை பயணிக்க வைப்பது தான். அது ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் நடைபெறவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் இந்த தருணத்தில் சூர்யகுமார் யாதவ் ஒரு கேப்டனாக என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

சற்று முன்