- Advertisement -
Homeவிளையாட்டுஎப்பா பும்ரா.. எப்போதான்யா வரதா இருக்க.. ஹர்திக் பாண்டியாலாம் சாதனை படைக்கப் போறாரு பாருங்க!

எப்பா பும்ரா.. எப்போதான்யா வரதா இருக்க.. ஹர்திக் பாண்டியாலாம் சாதனை படைக்கப் போறாரு பாருங்க!

- Advertisement-

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கடந்த 11 மாதங்களாக ஓய்வில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு வந்துவிடுவார், ஐபிஎல் தொடருக்கு வந்துவிடுவார், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு வந்துவிடுவார், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வந்துவிடுவார் என்று காலங்கள் போனதே தவிர, பும்ரா வந்ததாக இல்லை.

இதனால் உண்மையிலேயே பும்ராவின் ஓய்வுக்கு காயம் தான் காரணமா என்ற ரசிகர்களே சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினார் பும்ரா. முதல் 6 ஓவர்கள் வீசிய பும்ரா, பின்னர் 9 ஓவர்கள் வரை வீசி பயிற்சி மேற்கொண்டார்.

இதன்பின் பும்ராவின் உடல்தகுதியை பரிசோதிப்பதற்காக என்சிஏ-விலேயே கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்பின்னரே பும்ரா அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பும்ராவின் பந்துவீச்சு மீண்டும் பழையபடி இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே உள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் எடுத்தால், பும்ராவின் சாதனையை தகர்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுவரை 60 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, மொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 70 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement-

அதேபோல் 77 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா இதுவரை 70 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் வீழ்த்தினால் பும்ராவை விட அதிக விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைப்பார். இதனால் பும்ரா ரசிகர்கள் சோகத்தில், புலம்பி வருகின்றனர்.

இந்த பட்டியலில் சாஹ\ல் 93 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளையும், அஸ்வின் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அதன்பின் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.

சற்று முன்