- Advertisement -

மேட்ச் ஜெயிச்சா போதாது, அந்த தப்ப ஏத்துக்க முடியல.. என்னோட பவுலிங் ரகசியம் இதான்.. உண்மையை உடைத்த ஹர்திக்..

தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இனிமேல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது மிக மிக கடினம் என்றாலும் கூட மற்ற அணிகளின் கனவை சிதைப்பதற்கும் மும்பை அணிக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த சீசனிலேயே மிரட்டலான அணிகளில் ஒன்றாக இருந்து வந்த சன்ரைசர்ஸ் அணி, சமீபத்தில் ஒரு சில போட்டிகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. கடந்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.

- Advertisement -

அதிலும் மும்பை அணிக்கு எதிராக 173 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உருவாகியிருந்தது. ஆனாலும் சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா நிலைத்திருந்து ஆடி ரன் சேர்த்ததால் ஹைதராபாத் அணியின் வெற்றி வாய்ப்பும் பரிதாபமாக பறிபோனது.

31 ரன்கள் சேர்ப்பதற்குள் மும்பை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அதன் பின்னர் கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். 140-க்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் மட்டுமில்லாமல் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட அவர்கள், 18 வது ஓவரிலேயே போட்டியை முடித்து வைத்தனர்.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணிக்கு பெரிதாக சாதகமில்லை என்றாலும் கூட தொடர் தோல்விகளால் துவண்ட அவர்களுக்கு ஒரு நல்ல ஒரு தெம்பாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. இதற்கு பின் பேசியிருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நல்ல கிரிக்கெட் ஆடுவதில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இப்போதும் கூட நாங்கள் 10 முதல் 15 ரன்களை அதிகமாக கொடுத்து விட்டதாகவே கருதுகிறோம். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடியது மிக அற்புதமாக இருந்தது.

என்னுடைய பந்துவீச்சை பொறுத்தவரையில் நான் சரியான இடத்தில் பந்துவீசி, சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீச வேண்டும் என விரும்பி வருகிறேன். இந்த போட்டியில் அது சிறப்பாக அமைந்துவிட்டது. பியூஷ் சாவ்லா அவுட் செய்த பேட்ஸ்மேன்கள் நின்றிருந்தால் அவர்கள் போட்டியையே மாற்றி இருப்பார்கள்.

சூர்யகுமார் அதுவும் நம்ப முடியாத வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். பந்து வீச்சாளர்களுக்காக எதிராக நெருக்கடியை உருவாக்கி ரன் சேர்ப்பது தான் ஒரு சிறப்பம்சம். அவரும் தற்போது தனது பேட்டிங்கை அதிகமாக மாற்றி மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருவதுடன் மட்டுமில்லாமல் தனக்கு ஏற்ப போட்டியையும் அழகாக மாற்றி விடுகிறார். அவர் எங்கள் அணியில் இருப்பதையே அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Recent Posts