- Advertisement 3-
Homeவிளையாட்டுஆழமா பதிஞ்சுருச்சு.. டிராவிட் சொன்ன வார்த்தை தான்.. என்னோட இந்த ஆட்டத்துக்கு காரணம்.. மனம்திறந்த ஹர்திக்..

ஆழமா பதிஞ்சுருச்சு.. டிராவிட் சொன்ன வார்த்தை தான்.. என்னோட இந்த ஆட்டத்துக்கு காரணம்.. மனம்திறந்த ஹர்திக்..

- Advertisement 1-

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்ற போது எந்த அளவுக்கு ரசிகர்களின் ஏச்சுகளை சம்பாதிக்க முடியுமோ அந்த அளவுக்கு சம்பாதித்தவர் தான் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா. மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக்கை அறிவித்தும் அதன் மீதான பழி அனைத்தையும் அவர்தான் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இதனால் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என அனைத்திலும் எந்தவித தாக்கத்தையும் ஐபிஎல் தொடரில் நிகழ்த்தாமல் போன ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவிப்பதற்கு முக்கிய காரணமாகவும் இருந்து வருகிறார்.

இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சில சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்து காட்டியுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் அரைச் சதம் அடித்திருந்த ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.

50 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, அதற்கு முக்கிய பங்கு வகித்ததற்காக ஆட்டநாயகன் விருதும் ஹர்திக் பாண்டியாவிற்கு கிடைத்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டுள்ள சூழலில், இனிவரும் நாக் அவுட் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா இதைவிட பல மடங்கு அதிகமாக இந்தியாவிற்கு பலம் சேர்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

மேலும் ஆட்டநாயகன் விருதையும் வென்ற பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “நாங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி உள்ளோம். இவை அனைத்தையும் விட எங்களின் திட்டம் என்ன என்பதை அறிந்து அதை செயல்படுத்தியது தான் மிக முக்கியம். காற்று சற்று அதிகமாக இருந்த போதிலும் அதனை பாதகமாக எடுக்காமல் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நானும் எனது அணியின் பேட்ஸ்மேன்களும் அதனை பயன்படுத்தினோம்.

அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் விழுந்த இடத்தில் உள்ள தவறுகளை சரி செய்து தற்போது ஒரு குழுவாக சிறப்பாக பேட்டிங் ஆடி வருகிறோம். இந்திய அணிக்காக ஆடி வருவதை நான் பாக்கியம் செய்தவனாக கருதுகிறேன். ஒருமுறை ராகுல் டிராவிட்டிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் என்னிடம், ‘யார் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை தான் அதிர்ஷ்டம் தேடி வரும்’ என கூறினார். அந்த வார்த்தை எனது மனதில் நீண்ட காலமாக ஆழமாக பதிந்து விட்டது” என ஹர்திக் கூறினார்.

சற்று முன்