- Advertisement -
கிரிக்கெட்

நான் நெறைய பேச வேண்டியிருக்கு.. விக்கெட் போனதும் மேட்சும் போச்சு.. வேதனையில் ஹர்திக்..

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தற்போது மும்பை அணி தோல்வி அடைந்துள்ளதால் அவர்களின் பிளே ஆப் வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து போயுள்ளது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக அவர்கள் தோல்வி கண்டுள்ள நிலையில் இன்னும் உள்ள மூன்று போட்டிகளிலும் அவர்கள் வென்றால் கூட மொத்தம் ஆறு போட்டிகளில் தான் அவர்கள் வென்ற நிலை வரும்.

இன்னும் அதிகாரப்பூர்வமாக மும்பை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்கவில்லை என்றாலும் ஒரே ஒரு சின்ன சதவீத வாய்ப்பு தான் அவர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் பல சிறப்பான வீரர்கள் இருந்தபோதிலும் அவர்களால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கவும் முடியாமல் தடுமாறி வருகின்றனர். அந்த அணியில் என்னதான் பிரச்சனை என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில் தான் அவர்களின் லீக் போட்டிகள் முடிவடையும் சூழலை எட்டி உள்ளது.

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் மும்பை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த சீசனில் பல அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவித்து வரும் நிலையில் அதனை எதிர்த்து ஆடும் அணிகள் எளிதாக சேசிங் செய்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் தான் இந்த போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயத்த 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் சூர்யகுமாரை தவிர யாருமே சிறப்பாக செயல்படவில்லை. சூர்யகுமார் மட்டும் தனியாளாக ரன்சேர்த்து அரைச்சதம் கடந்திருந்த நிலையில் அவர் அவுட் ஆனதும் மும்பை அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது.

- Advertisement -

இதனால் 19 வது ஓவரிலேயே ஆல் அவுட்டான மும்பை அணி 145 ரன்கள் மட்டுமே எடுக்க கொல்கத்தா அணி 24 வித்தியாசத்தில் தங்கள் வெற்றியை உறுதி செய்து பிளே ஆப் சுற்றும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. இந்த சீசனில் முதல் முறையாக மும்பை அணியின் கேப்டனாக மாறி இருந்த ஹர்திக் பாண்டியா கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு பின் பேசுகையில், “நாங்கள் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைக்காமல் விக்கெட்களை தொடர்ந்து இழந்து கொண்டே இருந்தோம். இதில் நிறைய கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

ஆனால் அதற்காக நேரம் எடுத்துக் கொள்வோம். இதனால் தற்போது பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை இந்த போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் மிக அபாரமாக செயல்பட்டிருந்தனர். இரண்டாவது இன்னிங்சில் பனி அதிகமாக வந்திருந்தது. இந்த போட்டியை முழுவதும் ஆராய்ந்து இனிமேல் சிறப்பாக ஆட என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.

நீங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் நான் எனக்கு நானே சொல்லிக் கொள்வது. கடினமான நாட்கள் வரும். ஆனால் நீங்கள் சவாலை எதிர் கொண்டே ஆக வேண்டும்” என ஹர்திக் கூறினார்.

- Advertisement -

Recent Posts