- Advertisement 3-
Homeவிளையாட்டுகுஜராத் கேப்டனா இருந்தப்பவே கஷ்டப்பட்டேன்.. இப்ப கூட.. ஹர்திக்கை புலம்ப விட்ட மும்பை வீரர்..

குஜராத் கேப்டனா இருந்தப்பவே கஷ்டப்பட்டேன்.. இப்ப கூட.. ஹர்திக்கை புலம்ப விட்ட மும்பை வீரர்..

- Advertisement 1-

முதல் மூன்று போட்டிகளில் முறையே குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போயிருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி, அணியில் பிளவுகள் என பல்வேறு விஷயங்கள் கடும் விமர்சனத்தை சந்தித்திருந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தங்களின் புள்ளிக் கணக்கையும் தொடங்கி இருந்தது மும்பை அணி.

அப்படி ஒரு சூழலில் தங்களின் ஐந்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டிருந்தது மும்பை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 196 ரன்கள் எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக், பாப் டுப்ளெஸிஸ் மற்றும் ராஜத் பட்டிதர் ஆகிய மூவருமே அரைச் சதம் அடித்ததால் நல்ல ஸ்கோரையும் அவர்கள் எட்டி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 197 ரன்கள் என்ற இலக்குடன் ஆடி இருந்த மும்பை அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இணைந்து 50 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விட்டனர். 69 ரன்களில் இஷான் கிஷன் அவுட்டாக, பின்னர் இணைந்த ரோஹித் மற்றும் சூர்யகுமாரும் அருமையாக ஆடி ரன் சேர்த்தனர்.

17 பந்துகளிலேயே 50 ரன்கள் அடித்து நான் திரும்ப வந்துட்டேன் என்பது போல பேயாட்டம் ஆடிய சூர்யகுமார் யாதவ், அடுத்த சில பந்துகளில் அவுட்டாக, பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மாவும் அதிரடியாக ஆடியதால், 15. 3 ஓவர்களில் இலக்கை எட்டி ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.

- Advertisement 2-

மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பின் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “எப்போதும் வெற்றி பெறுவது சிறப்பாக உள்ளது. அதுவும் இது போன்ற ஒரு வழியில் ஜெயிப்பது மனதில் மிகவும் பதிந்து போனது. இன்பாக்ட் பிளேயர் என்பது இன்னொரு பவுலரை அதிகமாக பயன்படுத்துவதற்கும் ஒரு வழியாக உள்ளது.

ரோஹித் மற்றும் இஷான் கிஷன் பேட்டிங் செய்து அடித்தளத்தை அமைத்தது நாங்கள் சீக்கிரம் போட்டியை முடிக்கவும் உதவியது. ஒவ்வொரு வீரருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருப்பதே எங்களுடைய அணியின் அழகு. பும்ரா என் பக்கம் இருப்பதே ஒரு பெரிய வரமாக பார்க்கிறேன். அவர் திரும்பத் திரும்ப அணிக்காக இதை செய்து கொண்டே இருக்கிறார். அதிகமாக பயிற்சியில் ஈடுபடும் அவர், தனது தன்னம்பிக்கை மற்றும் அனுபவத்தின் மூலம் சாதித்து வருகிறார்.

சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்ததும் வெல்கம் பேக் என்று நான் அவரிடம் கூறினேன். நான் எதிரணியின் கேப்டனாக இருந்த போதும் சூர்யகுமார் யாதவிற்கு ஃபீல்டிங் செட் செய்ய கடினமாக தான் இருக்கும். அவர் சில இடத்தில் ஷாட்களை அடித்த போது எந்த பேட்ஸ்மேனும் அப்படி அடித்து பார்த்ததில்லை. எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் அப்படி தான் அவர் ஆடுகிறார்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்