- Advertisement -
Homeவிளையாட்டுதோத்திருந்தா அவ்ளோ தான்... அடிப்படை வசதியாவது வேணும்... எல்லாத்தையும் ரோகித் சர்மாவே எடுத்துக்கட்டும்.. ஹர்திக் பாண்டியா...

தோத்திருந்தா அவ்ளோ தான்… அடிப்படை வசதியாவது வேணும்… எல்லாத்தையும் ரோகித் சர்மாவே எடுத்துக்கட்டும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு

- Advertisement-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டநாயகனாகவும், இஷான் கிஷன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2வது போட்டியில் மோசமான தோல்வியடைந்த இந்திய அணி, சிறந்த கம்பேக்கை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும் போது, இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷலானது. ஒரு கேப்டனாக இதுபோன்ற பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தால், எவ்வளவு சோகமடைந்திருப்போம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் எங்கள் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டோர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள். ஆனால் ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு களத்தில் நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே டாப் ஆர்டரில் களமிறக்கினோம். இந்தப் போட்டிக்கு முன்பாகவே விராட் கோலியுடன் சில ஆலோசனைகளை செய்து வந்தேன். அவர் என்னை ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்றவாறு எனது ஆட்டத்தை மாற்ற, களத்தில் சிறிது நேரமிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுரை எனக்கு பயனுள்ளதாக அமைந்தது.

- Advertisement-

பேட்டிங் செய்யும் போது நல்ல ஷாட்களை ஆடிவிட்டு, சரியான ஃபார்முக்கு வரும் உணர்வே வித்தியாசமானது. 350 ரன்கள் என்ற இலக்கு கொஞ்சம் கடினமானது தான். ஆனால் ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்களால் எளிதால சேஸ் செய்ய முடியும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை பவர் பிளே ஓவர்களிலேயே முடித்துவிட்டோம். 23வது ஓவருக்கு பின் ஒரேயொரு பார்ட்னர்ஷிப் மட்டுமே அமைந்தது.

அடுத்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரும் போது, பயணம் உள்ளிட்ட வசதிகளை திட்டமிட்டு செய்தால் நன்றாக இருக்கும். இதனை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் ஆடம்பர வசதிகளை கேட்கவில்லை. அடிப்படை வசதிகளையே எதிர்பார்க்கிறோம்.  என்று தெரிவித்துள்ளார்.

இந்த சீரிஸ் வெற்றியின் எந்த பங்கை ரோகித்திற்கு நீங்கள் அளிக்க விரும்புகிறீர்கள் என்ற நெறியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ஹர்திக், இந்த சீரிஸின் வெற்றியை முழுமையாக ரோகித் சர்மாவே எடுத்துக்கொள்ளட்டும். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.

சற்று முன்