- Advertisement -
Homeவிளையாட்டுமும்பை சம்பவம் பண்ணும்.. அந்த 2 பேர் எனக்காக மும்பையில் இருக்குற வரைக்கும்.. வாக்கு கொடுத்த...

மும்பை சம்பவம் பண்ணும்.. அந்த 2 பேர் எனக்காக மும்பையில் இருக்குற வரைக்கும்.. வாக்கு கொடுத்த ஹர்திக்..

- Advertisement-

தொடர்ச்சியாக மிக நிலையான ஒரு கேப்டனாக மும்பை அணிக்கு இருந்து வந்த ரோஹித் சர்மாவை மாற்றிவிட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்திருந்தது மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை ரசிகர்கள் மத்தியில் சந்தித்திருந்தது. அதே வேளையில், குஜராத் அணிக்காக இரண்டு சீசன்கள் ஆடி நல்லதொரு அணியாகவும் அவர்களை மாற்றியிருந்த போதிலும் அதிலிருந்து ஹர்திக் விலகுவதாக விருப்பம் தெரிவித்தது குஜராத் ரசிகர்களையும் கோபம் அடைய வைத்திருந்தது.

இப்படி தன்னைச் சுற்றி பல நெருக்கடியான சூழல் இருக்கும் நிலையில் தான் மும்பை அணியின் கேப்டனாக வரும் 22 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைக்க உள்ளார் ஹர்திக் பாண்டியா. இவர் மீதான அழுத்தமும் அதிகமாக இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது அணியை தயார் செய்து ஆடுவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக தான் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருந்த ஹர்திக் பாண்டியா தனது சொந்த வீட்டிற்கு திரும்பியது போன்ற உணர்வை தருவதாகவும் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது அணி வீரர்களுடன் சேர்ந்து மிக கடினமாக இறங்கி முனைப்புடனும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் சில கருத்துக்களை தனது பேட்டியிலும் தெரிவித்துள்ளார். “மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிவது மிகச் சிறப்பான ஒரு அம்சமாகும். என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கிய இடமும் இதுதான். மீண்டும் வீட்டிற்கு திரும்புவது போன்ற மகிழ்ச்சியையும் தான் எனக்கு கொடுக்கிறது. ஆரம்பம் முதலில் இங்கே மலிங்கா என்னுடைய சகோதரர் போலவும் பயிற்சியாளர் மார்க் பவுசர் அற்புதமான ஒரு நபராகவும் இருந்து வருகிறார்.

- Advertisement-

அனைவரும் நினைத்து பெருமைப்படக்கூடிய அளவிலான ஒரு கிரிக்கெட்டை தான் நாங்கள் விளையாட உள்ளோம். என்னைப் பொறுத்த வரையில் அது யாருமே மறக்க முடியாத அளவுக்கு ஒரு நல்ல பயணமாக இருக்கும் என்று தான் தெரிகிறது” என கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா இதுவரை ரோஹித் கேப்டன்சி சர்ச்சை பற்றி எதுவுமே பேசாமல் இருந்து வரும் நிலையில், அணியினருடன் இணைந்து ரோஹித் பயிற்சியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல, தன்னை கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்பட்டதை அறிந்து ரோஹித் அதிர்ச்சி அடைந்திருப்பார் என ஹர்பஜன் சிங் கூறியிருந்ததும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

சற்று முன்