- Advertisement 3-
Homeவிளையாட்டுதாய் வீட்டிற்கு திரும்பும் ஹர்திக் பாண்டியா.. மும்பை அணி கொடுத்த பிரம்மாண்ட ஆஃபர்.. ஓகே சொன்ன...

தாய் வீட்டிற்கு திரும்பும் ஹர்திக் பாண்டியா.. மும்பை அணி கொடுத்த பிரம்மாண்ட ஆஃபர்.. ஓகே சொன்ன குஜராத் அணி நிர்வாகம்.. பல்தான்ஸ்-க்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

- Advertisement 1-

2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட நிலையில், லக்னோ அணிக்கு கேப்டன்சி பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்றார்.

அதுமட்டுமல்லாமல் அறிமுகத் தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேபோல் 2 ஆண்டுகளில் இரு அணிகளும் இரு முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஆனால் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் இல்லாமல் மும்பை அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு முன் நாளை மறுநாள் 6 மணிக்குள் அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்குள் வீரர்களை டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்ள கால அவசாகம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே மும்பை அணி தரப்பில் லக்னோ அணிக்காக ஆடிய ஷெப்பர்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மும்பை அணி தரப்பில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

- Advertisement 2-

அதற்கு மாற்றாக ரோகித் சர்மா அல்லது ஆர்ச்சரை கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முன் வந்ததாக கூறப்படுகிறது. எப்படி அணியின் கேப்டன்களை இரு அணிகளும் மாற்றிக் கொள்ளும் என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் விட்டு கொடுக்க குஜராத் அணி நிர்வாகம் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் குஜராத் அணியின் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்புவதாக கூறப்படுகிறது. இது குஜராத் அணி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மும்பை அணி எந்த வீரரை குஜராத் அணிக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் பல்தான்ஸ் ரசிகர்கள் மத்தியில் தீவிரமாகியுள்ளது.

சற்று முன்