கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனி ஒரு நபராக நின்று பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்ததை யாராலும் இன்றளவும் மறைந்திருக்க முடியாது. அந்த அளவு அன்றைய போட்டியில் விராட் கோலி தனி ஒரு நபராக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
குறிப்பாக அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழந்து வெளியேறுகையில் விராட் கோலி மட்டும் ஒரு பக்கம் நிலைத்து நின்று கடைசி கட்டத்தில் பாண்டியாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையான வெற்றியை தேடித்தந்தார்.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹாரிஸ் ரவுப் வீசிய பந்தில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள் இன்றளவும் யாராலும் அடிக்க முடியாத சிக்சர்களாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஷார்ட் லென்ந்தில் வீசப்பட்ட பந்தை அவர் நேர் எதிர்ப்புறம் சிக்ஸர் அடித்தது இன்றளவும் எப்படி அதனை அவர் செய்தார் என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு விசித்திரமான ஒரு ஷாட்டாக பார்க்கப்படுகிறது.
இப்படி ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய விராட் கோலி தற்போதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்நிலைடயில் ஹாரிஸ் ரவுப் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் விளையாடியதாலே தன்னுடைய திறனை அதிகரித்து பாகிஸ்தான் அணியில் பிடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய திறனில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த அவர் தற்போது உலகில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் வேளையில் கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக நெட் பவுலராக பயணித்தது குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் நெட் பவுலராக இருந்தபோது விராட் கோலிக்கு எதிராக அதிக நேரம் பந்துவீசினேன். அப்போது அவர் நான் வீசும் பந்துகளில் எந்த இடத்தில் விளையாடுகிறார் என்று என்பதை கூர்ந்து கவனித்தேன்.
அதேபோன்று அவரும் பந்து படும் இடத்தை கவனமாக தேர்வு செய்து விளையாடியதாக எனக்கு தோன்றியது. அவருடைய திறனும் அவருடைய டெக்னிக்கும் மிகச் சிறப்பாக இருப்பதை நான் அப்போதே புரிந்து கொண்டேன், ஏனெனில் ஒரு நெட் பவுலராக நான் இருந்த போதும் கூட அவர் எனக்கு எதிராக விளையாடும் போது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பான பவுலரை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமோ அதே கட்டுகோப்புடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார். அந்த இடத்திலேயே அவர் கொடுத்த ஒரு உழைப்பு இன்று அவர் எவ்வளவு புகழில் இருக்கிறார் என்பதை அதன்மூலமே வெளிக்காட்டுவதாக நான் உணர்ந்தேன் என ஹாரிஸ் ரவுப் கூறியது குறிப்பிடத்தக்கது.