- Advertisement 3-
Homeவிளையாட்டு145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நபராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் ஹாரி...

145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நபராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் – விவரம் இதோ

- Advertisement 1-

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளை பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 6-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணியானது 237 ரன்களை குவித்தது. பின்னர் 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 224 ரன்கள் குவித்தது.

இன்னார் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது. இன்னும் இந்த தொடரில் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் தற்போது ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் முதல் இன்னிங்ஸில் 11 பந்துகளை சந்தித்து 3 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 93 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள் உதவியுடன் 75 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement 2-

அவர் அடித்த இந்த 78 ரன்கள் மூலம் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் இமாலய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தற்போது ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 1058 பந்துகளை சந்தித்துள்ள ஹாரி ப்ரூக் (1000) ஆயிரம் ரன்களை குவித்து குறைந்த பந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டும் இன்றி இங்கிலாந்து அணிக்காக வெறும் 17 இன்னிங்சில் அவர் இந்த ஆயிரம் ரன்களை தொட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்