ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய முக்கியமான ஒரு ஐபிஎல் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பாஃப் டு பிளஸ்சி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
அதன் படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதல் இரண்டு விக்கெட்களை சீக்கிரமே இழந்து தடுமாறினாலும், அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உள்பட 51 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் ஆர்.சி.பி பவுலர்கள் ரன்ரேட்டை கட்டுப்படுத்த ஐதராபாத் அணி 5 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் சேர்த்தது.
ஒரு கட்டத்தில் தடுமாறிய அணியை ஹெண்ட்ரிச் கிளாசன் தனியாளாக தூக்கி நிறுத்தினார். அவரை அவுட் செய்ய பௌலர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். அவர் இறுதிவரை களத்தில் இருந்திருந்தால் ஐதராபாத் அணிக்கு இன்னும் கூடுதலாக ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர் கடைசியில் ஹர்ஷல் படேல் பந்தில் பவுல்ட் ஆகி வெளியேறினார்.
பொதுவாக இது போன்ற சூழலில் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனால் அதை பௌலர்கள் பெரிதாக கொண்டாடுவார்கள். ஆனால் ஹர்ஷல் அப்படி எதுவும் செய்யவில்லை. அதற்க்கு மாறாக ஹெண்ட்ரிச் கிளாசனை பாராட்டும் விதமாக அவர் தனது கைகளை தட்டினார். இந்த சம்பவம் கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன்களின் விளையாட்டு என்பதைக் காட்டியது. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிக்கலாமே: 18 தனக்கு ராசியான நம்பர் என்பதை மீண்டும் நிரூபித்த கோலி. இதே தேதியில் இதற்கு முன் அவர் செய்த சில தரமான சம்பவங்கள் ஒரு பார்வை
பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கோலி மற்றும் பாஃப் டு பிளஸ்சி ஆகியோர் விக்கெட் இழக்காமல் அதிரடியாக விளையாடினர். நிதானமாக ஆரம்பித்து 35 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி, அடுத்த 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதமடித்தார். ஐபிஎல் போட்டிகளில் கோலி, அடிக்கு 6 ஆவது சதம் இதுவாகும். சதமடித்த அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்ற கோலி, எல்லைக் கோட்டிற்கு அருகே கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். மேலும் ஒரே போட்டியில் இரு அணிகளை சேர்ந்த வீரர்கள் சதம் அடிப்பதும் இதுவே முதல் முறை.