இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
ஐபிஎல் வரலாற்றில் இப்படி சகோதரர்கள் இருவர் கேப்டனாக மோதிக் கொள்வது இதுவே முதல்முறை என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தில் இருந்தது. அதனை தொடர்ந்து இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து அசத்தியது.
குஜராத் அணி சார்பாக துவக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களையும், சுப்மன் கில் 94 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்ததால் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய குஜராத் அணியில் முதல் விக்கெட் விழுந்ததும் இரண்டாவது விக்கெட்டுக்கு களம்புகுந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா இறங்கியதில் இருந்து அதிரடியாக ஆடினார். அப்படி இந்த போட்டியில் 15 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 25 ரன்களில் ஆட்டம் இழந்தார். இப்படி இவர் ஆட்டம் இழந்த விதம் தான் தற்போது அனைவரும் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
ICYMI!
Batter to get out – Pandya
Fielder to take the catch – Pandya#TATAIPL #GTvLSG https://t.co/zRw6xcSLzc pic.twitter.com/ZBi3EqPXLj— IndianPremierLeague (@IPL) May 7, 2023
ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை சகோதரர் ஒருவர் கொடுத்த கேட்ச்சை மற்றொரு சகோதரர் பிடிப்பது இதுவே இரண்டாவது முறை. ஏற்கனவே யூசப் பதான் கொடுத்த கேட்ச்சை இர்ஃபான் பதான் பிடித்திருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் மோசின் கான் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா வலுவாக அடிக்க அதனை க்ருனால் பாண்டியா அற்புதமாக கேட்ச் பிடித்திருந்தார். அதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ஹார்டிக் பாண்டியா தனது அண்ணன் க்ருனால் பாண்டியாவை பார்த்து சிரித்துக் கொண்டே வெளியேறியது பார்ப்பவர்களை ரசிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.