ஏம்பா ஏய்.. அவர் உசுரோட தாம்ப இருக்காரு.. விட்டா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிடுவீங்க போலயே… ஆதாரத்தை வெளியிட்ட ஓலங்கா

- Advertisement -

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடும் பேமஸ் அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாபேவும் முதன்மையானது. ஜிம்பாப்வே அணி இப்பொழுது சரிவு நிலையில் இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் அந்த அணியானது சிறந்த அணியாக திகழ்ந்தது. அந்த அணி கடந்த காலங்களில் பல வெற்றிகளையும் குவித்துள்ளது.

ஜிம்பாப்வே அணியானது டெஸ்ட் தரவரிசையில் தற்பொழுது பத்தாவது இடத்திலும், ஒரு நாள் மற்றும் டி20 தரவரிசையில் முறையே பதினோராவது இடத்தையும் பெற்றுள்ளது. அந்த அணி மீண்டும் பழைய ஃபார்மை பெற கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. அந்த அணி வரவிருக்கும் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் துரதிஷ்டவசமாக தகுதி பெற தவறியது.

- Advertisement -

இந்நிலையில் ஜிம்பாவேவின் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளருமான ஹித் ஸ்ட்ரீக் புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும், அவருக்கான சிகிச்சை பலனளிக்காமல் அவர் மறைந்ததாகவும் ஒரு செய்தி மீடியாக்களில் மிக வேகமாக பரவியது. ஆனால் இது அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவல் என சக ஜிம்பாப்வே அணி வீரர் ஹென்றி ஓலங்கா மறுத்துள்ளார். அவர் கூறுகையில்:

டிவிட்டர் வலைதளத்தில் ஹீட் ஸ்ட்ரீக் காலமானார் என்ற செய்தி உலா வருகிறது. இச்செய்தியானது உண்மையா பொய்யா என்பது கூட யாரும் சரியாக அறியாமல் பரப்பி வருகின்றனர். இச்செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் அவரிடம் வாட்ஸ் அப்பில் பேசினேன், அவர் நல்ல உடல் நலத்துடன் நலமாகத்தான் இருக்கிறார் என அவரே என்னிடம் கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் உடல்நிலை குறித்து வதந்தி பரவி வரும் நிலையில், அதை எதிர்த்து மூன்றாம் நடுவரிடம் மேல் முறையீடு செய்யப் போவதாக என்னிடம் நகைச்சுவையாக கூறினார். எனவே அவரைப் பற்றிய வதந்தி பரப்புவதை நெட்டிசன்கள் தவிர்க்க வேண்டும் என ஹென்றி ஒலங்கா கேட்டுக்கொண்டார்.

மேலும் இதைப்பற்றி சம்பந்தப்பட்ட ஹித் ஸ்ட்ரீக் கூறுகையில்: எனது உடல் நலம் குறித்து பரவும் தகவல் உண்மையல்ல. இது உண்மைத் தன்மை அறியாமல் பரப்பப்படும் செய்தியாகும். இத்தகைய வதந்தியால் நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். எனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்