ஐபிஎல் 16 ஆவது சீசன் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வெற்றிகரமாக நேற்று முடிந்துள்ளது. நேற்றிரவு நடந்த பரபர இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி ரன்னராகியுள்ளது.
போட்டித் தொடர் முடிந்துள்ள நிலையில் சாம்பியன் அணி, ரன்னர், ப்ளே ஆஃப் தகுதி பெற்ற அணிகள், சிறப்பாக தனித்தனி பிரிவில் செயல்பட்ட வீரர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு பணமாகவும் பரிசுப் பொருளாகவும் ஏகப்பட்டவை வழங்கப்பட்டுள்ளன அவை பற்றிய முழு விவரத்தை இப்போது பார்ப்போம்.
- ஐபிஎல் 2023 சாம்பியன் – சிஎஸ்கே – 20 கோடி ரூபாய் பரிசு
- ஐபிஎல் 2023 ரன்னர் – குஜராத் டைட்டன்ஸ் – 12.5 கோடி ரூபாய் பரிசு
- பேர் ப்ளே விருது – டெல்லி கேப்பிடல்ஸ் அணி – கோப்பை மட்டும்
- ப்ளேயர் ஆஃப் தி சீசன் – ஷுப்மன் கில் – டாடா எலக்ட்ரிக் கார்
- ஆரஞ்ச் கேப் பேட்ஸ்மேன் – ஷுப்மன் கில் – 890 ரன்கள் – 10 லட்சம் பரிசு
- பர்ப்பிள் கேப் பவுலர் – முகமது ஷமி – 28 விக்கெட்கள் – 10 லட்சம் பரிசு
- எமர்ஜிங் ப்ளேயர் – யஷஸ்வி ஜெய்ஸ்வா (625 ரன்கள்) – 10 லட்சம் பரிசு
- மோஸ்ட் வேல்யுபிள் வீரர் – ஷுப்மன் கில் (343 புள்ளிகள்) – 10 லட்சம் பரிசு
- கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் – ஷுப்மன் கில் – 10 லட்சம் பரிசு
- எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் – கிளன் மேக்ஸ்வெல் – 10 லட்சம் பரிசு
- கேட்ச் ஆஃப் தி சீசன் – ரஷீத் கான் – 10 லட்சம் பரிசு
- அதிக தூரம் சிக்ஸ் அடித்த வீரர் – ஃபாஃப் டு பிளசிஸ் – 115 மீட்டர் – 10 லட்சம் பரிசு
என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிக பரிசுகளை வென்றுள்ளார் இந்திய அணியின் இளம் நட்சத்திரமான ஷுப்மன் கில். அவருக்கு அடுத்த இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரஷீத் கான் போன்ற இளைஞர்களே அதிக பரிசுகளை வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனை பொறுத்தவரை அதிக டாட் பால் வீசியது ஷமி தான். அவர் மொத்தம் 193 டாட் பால்களை வீசியுள்ளார். அதே சமயம் ஒரு போட்டியில் சிறப்பான பௌலிங் என்றால் அது ஆகாஷ் மாத்வல் வீசியது தான். அவர் லக்னோவிற்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இதையும் படிக்கலாமே: எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இதை செய்வதாக சிஎஸ்கே கூறியது. எல்லா புகழும் மஹி பாய்க்கே – அஜிங்யே ரஹானே பேச்சு
இந்த சீசனில் அதிக மெய்டன் ஓவர் வீசியது டிரென்ட் போல்ட் தான். அவர் 10 போட்டிகளில் 3 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார். அதே சமயம் வெற்றி பெரும் அணியில் அதிக முறை விளையாடியவர் என்ற ரோகித் ஷர்மாவின் சாதனையை தற்போது சமம் செய்துள்ளார் அம்பட்டி ரைடுவிற்கு. இருவரும் 6 முறை இப்படி விளையாடி உள்ளனர். சிறந்த பிட்ச் என்ற விருது மும்பை வான்கடே மைதானத்திற்கும், சிறந்த கிரௌண்ட் என்ற விருது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.