- Advertisement 3-
Homeவிளையாட்டுமேட்ச் ஜெயிக்க காரணம் போல்ட் தான்.. கடைசி ஓவரில் நடந்த மேஜிக்.. ரகசியம் உடைத்த ஹெட்மயர்..

மேட்ச் ஜெயிக்க காரணம் போல்ட் தான்.. கடைசி ஓவரில் நடந்த மேஜிக்.. ரகசியம் உடைத்த ஹெட்மயர்..

- Advertisement 1-

பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி ஏறக்குறைய தோல்வி தான் அடைந்திருக்க வேண்டும். 148 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் அதனை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி மிக மிக நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. அதே போல பஞ்சாப் அணி வீரர்கள் பந்து வீச்சிலும், ஃபீல்டிங்ககிலும் ராஜஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க பவுண்டரிகள் அடிக்க முடியாமலே கடுமையாக சிரமப்பட்டனர்.

இதனால் கடைசி ஓவர் வரை போட்டி விறுவிறுப்பாக, யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாமல் சென்று கொண்டிருந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் மிகச் சிறப்பாக ஆடி, பஞ்சாப் அணியின் வெற்றியையும் கெடுத்து விட்டார் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஹெட்மயர். இவர் பத்து பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்கள் சேர்த்ததால் ஒரு பந்தை மீதம் வைத்து ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி இருந்தது.

கைவசம் விக்கெட்டுகள் குறைவாக இருந்த போதும் கடைசி ஓவரில் 10 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், அந்த ஓவரின் பந்துகளை எதிர் கொண்டு இரண்டு சிக்ஸர்கள் எடுத்து போட்டியை முடித்து வைத்த ஹெட்மயர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார். ராஜஸ்தானுக்காக போட்டியை வென்றதன் பின் அவர் பேசுகையில், “போட்டியை முடித்து வைப்தை ஒரு பயிற்சியை போலத்தான் பார்க்கிறேன். வலைப் பயிற்சியின் போது மிக மிக அதிகமாக நான் பேட்டிங்கில் பயிற்சி மேற்கொண்டு, மற்ற வீரர்கள் அவுட்டான பின் நான் உள்ளே சென்று சிக்ஸர்களை அடிக்க முயற்சித்து வருகிறேன்.

பினிஷர் ஆக இருப்பது ஒரு பக்கம் வரமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது சாபமாகவும் பார்க்கப்படுகிறது. சில நேரம் நீங்கள் நினைத்ததை செய்து விடலாம், ஆனால் மற்ற நேரங்களில் அது நடக்காது. எனது அணிக்காக வெற்றியை எடுத்துக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசி ஓவரில் முதல் இரண்டு பந்துகளை நான் டாட் செய்ததும் நெருக்கடி உருவானது. அப்போது என்னுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போல்ட் என்னிடம், ‘கவலைப்பட வேண்டாம், இதை நாம் வென்று விடுவோம்’ என்று கூறினார்.

- Advertisement 2-

அந்த நம்பிக்கையுடனும் சேர்த்து ரன் முடித்திருந்தேன். மேலும் இரண்டு ரன்கள் வேண்டும் என இருந்த போது நான் போல்ட்டுக்கு சிங்கிள் கொடுக்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் பந்து புல்டாஸ் ஆக வந்ததால்தான் அதனை சிக்சர் அடிக்க முடிவு செய்து வெளியே விரட்டி இருந்தேன். உங்களின் குடும்பத்தை விட்டு நீங்கள் தூர இருக்கும் போது உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றால் இது போன்ற ஒவ்வொரு தருணத்தையும் நீங்கள் ரசித்து கொண்டே இருக்க வேண்டும்” என ஹெட்மயர் தெரிவித்தார்.

சற்று முன்