- Advertisement -
Homeவிளையாட்டுWTC Final 2023: கோலிய அவுட் ஆக்க நாங்க விரித்த வலை இது தான். சரியாக...

WTC Final 2023: கோலிய அவுட் ஆக்க நாங்க விரித்த வலை இது தான். சரியாக அதில் அவரே வந்து சிக்கிக்கிட்டாரு – வெற்றிக்கு பின் ஸ்காட் போலந்து பேச்சு

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது இன்றுடன் முடிவுக்கு வந்தது. 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் மட்டுமே குவித்ததால் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலந்து முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜாஷ் ஹேசல்வுட் போட்டிக்கு முன்னர் காயமடைந்து இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற சூழல் ஏற்பட்ட நிலையில் மாற்றுவீரராக அணிக்குள் வந்த ஸ்காட் போலந்து நேரடியாக பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று பேட் கம்மின்ஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி தனக்கு கிடைத்த வாய்ப்பினை அற்புதமாக பயன்படுத்திய அவர் இந்திய அணிக்கு எதிராக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணிக்கு எதிராக பந்துவீசியது குறித்து பேசியுள்ள ஸ்காட் போலந்து கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் பந்துவீசிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தமாக எங்களது அணியின் வீரர்கள் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த போட்டியில் எங்களுடைய பந்துவீச்சு திட்டங்கள் மிக கட்டுக்கோப்புடன் இருந்தது. குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியாக பந்து வீசினால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தோம். அந்த வகையில் ஆஃப் ஸ்டம்புக்கு அருகில் பந்தை பவுண்ஸ் செய்து வீசினால் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் அந்த வலையில் சிக்குவார்கள் என்று நினைத்தோம். அதே திட்டத்தை தான் நான் கோலிக்கு எதிராகவும் பயன்படுத்தினேன்.

- Advertisement-

நான் நினைத்தது போலவே விராட் கோலியும் ஆஃப் ட்ரைவ் விளையாட முற்பட்டு ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். கேமரூன் கிரீன் நேற்று பிடித்த கேட்சை போல் இன்று ஸ்மித் அட்டகாசமான ஒரு கேட்டை பிடித்து அசத்தினார். அதோடு இந்த போட்டி முழுவதுமே எங்களது வீரர்கள் மிகச் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தியிருந்தனர்.

எப்பொழுதுமே பந்துவீச்சாளர்களாக நாங்கள் தொடர்ச்சியாக பந்துவீசும் போது பேட்ஸ்மேன்கள் எட்ஜ் எடுத்தால் அது பவுலர்களுக்கு நல்ல நம்பிக்கையை தரும். கடந்த 12 ஆண்டுகளாக விக்டோரியா அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அதே அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டிலும் அதே கடின உழைப்பை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதில் மகிழ்ச்சி. எதிர்வரும் ஆஷஸ் தொடருக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என ஸ்காட் போலந்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்