இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தோனி சென்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணி எவ்வாறு தடுமாறி வருகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 15 ஆண்டு காலம் இருந்தார். அவர் சென்றவுடன் அந்த இடத்திற்கு இந்திய அணி தான் ஒரு நிலையான விக்கெட் கீப்பரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தேர்வு செய்ய முடியவில்லை.
ரிஷப் பந்த், தோனியின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார்.மேலும் தோனி பினிஷர் ரோலில் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் பார்த்து வந்தார்.
தற்போது அவர் சென்றவுடன் அந்த இடத்திற்கு யார் வரப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை. வருடம் 3 ஆகியும் இதுவரை ஐந்து, ஆறு வீரர்களையாவது இந்திய இனி நிர்வாகம் ஆடிஷன் வைத்திருக்கும். ஆனால் ஒருவர் கூட அந்த இடத்திற்கு தகுதியானவராக இல்லை.
தற்போது ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அந்த இடத்தில் விளையாட வைக்கப்பட்டிருக்கிறார். எனினும் அவரும் தோனி லெவலுக்கு விளையாடவில்லை. இதைப் போன்று அர்ஜுனருக்கு கிருஷ்ணர் எவ்வாறு அறிவுரைகளையும் போதனைகளையும் வழங்கி வழி நடத்துவாரோ அதேபோல் விராட் கோலிக்கு தோனி பல அறிவுரைகளை களத்தில் கூறி வழி நடத்துவார்.
டிஆர்எஸ், பில்டர்களின் நிறுத்துவது போன்ற பல பணிகளை தோனி செய்தார். தற்போது அவர் சென்றதால் இந்திய அணி கேப்டன்கள் தடுமாறி வருகிறார்கள். இதே போன்று குல்திப் யாதவ், சாகல் ஆகியோர் தோனி விக்கெட் கீப்பராக இருக்கும்போது நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்தார்கள்.
ஆனால் தோனி இல்லாமல் நூல் அறுந்த காற்றாடி போல் எங்கெங்கோ சென்று கடைசியில் ஆகாயத்தில் இருந்து கீழே வந்து விட்டார்கள். இந்த நிலையில் தோனி போன்று ஒரு வீரர் கிடைப்பது சிரமம் தான். ஆனால் தோனிக்கு கங்குலி எவ்வாறு வாய்ப்பு கொடுத்து மெருகேற்றினாரோ, அதேபோல் மற்ற இளம் வீரர்களுக்கு இந்திய நிர்வாகம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை ரசிகர்களின் கோரிக்கையாகும்.