- Advertisement -
Homeவிளையாட்டுமெல்போர்ன் டெஸ்ட் தோத்தாலும் இந்தியா WTC ஃபைனல் போக வழி இருக்கு.. முழு விவரம் உள்ளே..

மெல்போர்ன் டெஸ்ட் தோத்தாலும் இந்தியா WTC ஃபைனல் போக வழி இருக்கு.. முழு விவரம் உள்ளே..

- Advertisement-

ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நான்கு அணிகளில் எந்த இரண்டு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதில் ஒரு அணி எது என்பதற்கும் தற்போது முடிவு கிடைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது அங்கே டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இதன் முதல் போட்டியில் 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென்னாபிரிக்க அணி அதில் வெற்றி பெற்றால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்குள் 8 விக்கெட்களை தென் ஆப்பிரிக்கா இழந்ததால் தோல்வி அடைந்து விடுவார்களோ என அனைவரும் கருதினர்.

இருந்தாலும் ஒன்பதாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ரபாடா மற்றும் யான்சென் ஆகிய இருவரும் வேறு விக்கெட் விழாமல் 50 ரன்கள் சேர்த்து முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறுவதையும் உறுதி செய்திருந்தனர். ஒரு அணி முடிவாகிவிட்டதால் தற்போது இலங்கை ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளில் எது இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.

இந்திய அணி மெல்போன் மைதானத்தில் தற்போது டெஸ்ட் ஆடிவரும் நிலையில் சிட்னி மைதானத்தில் ஒரு டெஸ்ட் மீதமுள்ளது. இதில் மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி ஏதாவது மேஜிக் செய்து வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர். மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டை இந்திய அணி வென்று விட்டால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடலாம்.

- Advertisement-

ஒருவேளை 4 வது போட்டி டிராவில் முடிந்தால் அல்லது இந்தியா தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு எப்படி முன்னேற முடியும் என்பதை தற்போது பார்க்கலாம். மெல்போர்ன் டெஸ்ட் டிராவில் முடிந்து இந்திய அணி சிட்னி டெஸ்டில் நிச்சயம் வென்றாக வேண்டும். அத்துடன் ஆஸ்திரேலியாவும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறக்கூடாது.

ஒருவேளை 1 – 1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் டிராவில் முடிந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற வேண்டும். மேற்கூறும் விஷயங்கள் நடைபெற சாத்தியங்கள் குறைவு என்றாலும் இவை நடந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறலாம்.

சற்று முன்