மும்பையின் தோல்வி ஆர்சிபிக்கு சாதகமா? அவர்கள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு எப்படி உள்ளது? – முழு விவரம்

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டின் புதிய ரைவல் அணிகளாக ஆகியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும். இதற்குக் காரணம் சில வாரங்களுக்கு முன்னர் நடந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த சர்ச்சைக்குரிய போட்டிதான். லோ ஸ்கோர் மேட்ச்சான இந்த போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்ததும் கோலியும் லக்னோ அணி ஆலோசகர் கௌதம் கம்பீரும் ஆவேசமாக மோதிக் கொண்டது கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னர் இரு அணிகளும் மாறி மாறி மற்ற அணியின் தோல்விகளைக் கொண்டாடும் விதமாக நடந்துகொள்கின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நேற்று லக்னோ அணி மும்பை இந்தியன்ஸை வெற்றி பெற்றிருப்பது பெங்களூர் அணிக்கு ப்ளே ஆஃப் கதவுகள் திறக்க சாதமாக அமைந்துள்ளது.  நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றிருந்தால் அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கலாம்.

இந்த தோல்வியால் இப்போது அவர்கள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை உறுதியாக சொல்ல முடியாது. ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றாலும், அவர்களின் மோசமான NRR (மைனஸில் உள்ளது) காரணமாக அவர்கள் தகுதி பெறாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி மிகப்பெரிய சந்தோஷத்தை ஆர்.சி.பி அணிக்குதான் கொடுத்திருக்கும். ஏனென்றால் ஆர்.சி.பி இனிமேல் தாங்கள் விளையாடும் இரண்டு போட்டிகளை வென்றால் மட்டும் போதும். அவர்களின் ரன் ரேட் ப்ளஸ்ஸில் இருப்பதால், மும்பை உள்ளிட்ட வேறு சில அணிகளின் வெற்றி அந்த அணியை பாதிக்காது.

இதையும் படிக்கலாமே: தோனி கண்டிப்பாக அடுத்த சீசன் விளையாட மாட்டார். முன்னாள் வீரர் சொன்ன பகீர் தகவல்

ஒருவேளை ஆர்சிபி தங்கள் இரண்டு போட்டிகளையும் வென்று, லக்னோ அணியும் தங்கள் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மூன்று மற்றும் நான்காம் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் இரு அணிகளும் எலிமினேட்டர் போட்டியில் மோத வேண்டிய சூழல் உருவாகும். இதை நினைத்து இப்போதே இரு அணி ரசிகர்களும் சமூகவலைதளங்களில் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement -

சற்று முன்