மும்பையின் தோல்விக்குப் பிறகு சி.எஸ்.கே.வின் ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது?- முழு விவரம்!

- Advertisement -

நேற்று நடந்த 63 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபகரமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் மும்பையின் ப்ளே ஆஃப் வாய்ப்பில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் அவர்களின் இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் பந்தயத்தில் உள்ள மற்ற அணிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றிருந்தால் அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கலாம். இந்த தோல்வியால் இப்போது அவர்களின் ப்ளே ஆஃப் செல்லும் விதி இனி முழுதும் அவர்கள் கைகளில் இல்லை. ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றாலும், அவர்களின்  மோசமான NRR (மைனஸில் உள்ளது) காரணமாக அவர்கள் தகுதி பெறாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.

- Advertisement -

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய இரு அணிகளும் தங்கள் எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால், மும்பை அணிக்கு சிக்கலாக அமையும். இல்லையென்றால் மும்பை கடைசி போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்புக் கிடைக்கும்.

மும்பையின் தோல்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு நல்ல விஷயமாக அமைந்துள்ளது. சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான வெற்றி பெற்றால், சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்துக்குள் சென்று நேரடியாக குவாலிஃபையர் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். மேலும் மும்பையின் இந்த தோல்வியால் சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

- Advertisement -

RR மற்றும் KKR போன்ற அணிகளுக்கு மும்பையின் தோல்வி ஒரு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. அவர்கள் பிளேஆஃப்களுக்கு 14 புள்ளிகளுடன் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் பெறுகின்றன. அவர்கள் தங்கள் இறுதி ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளைப் பெற்று, மும்பை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் தோற்றால், இரு அணிகளில் ரன்ரேட்டில் முன்னணில் இருக்கும் ஒரு அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பைப் பெறும்.

நல்ல ரன் ரேட் காரணமாக RCB மற்றும் PBKS இரண்டும் ப்ளே ஆஃப் செல்வதற்கான தங்கள் விதியை தங்கள் சொந்த கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இரண்டு அணிகளும் தங்கள் போட்டிகளை வென்றால் ப்ளே ஆஃப் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. மும்பை அணியின் கடைசி போட்டி வெற்றி கூட இவர்களை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்