- Advertisement -
Homeவிளையாட்டுவிராட் கோலியிடம் இருந்த கெட்ட பழக்கங்கள்.. கிரிக்கெட்டிற்காக மனுஷன் எதை எல்லாம் தியாகம் செய்திருக்கிறார், எதை...

விராட் கோலியிடம் இருந்த கெட்ட பழக்கங்கள்.. கிரிக்கெட்டிற்காக மனுஷன் எதை எல்லாம் தியாகம் செய்திருக்கிறார், எதை எல்லாம் மாற்றி இருக்கிறார் தெரியுமா?

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி இந்த நிலைமைக்கு வர தன்னுடைய வாழ்க்கையை அவர் தலைக்கீழாக மாற்றி இருக்கிறார்

எப்போதுமே சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்தார் போல் நாம் உழைக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் சில தீய பழக்கங்களை நாம் கைவிட வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதற்கு விராட் கோலி ஒரு வாழும் உதாரணம்.

அந்த வகையில் விராட் கோலி எந்தெந்த கெட்ட பழக்கங்களை மாற்றி இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். விராட் கோலி தன் உடல் நலம் குறித்து அக்கறையை கொண்டதில்லை. எப்போதுமே எது கிடைக்கிறதோ அதை நன்றாக சாப்பிடுவாராம்.

இனிப்பு வகைகள் ஐஸ்கிரீம் வகைகள் என்றால் விராட் கோலிக்கு மிகவும் பிடிக்குமாம். அதனை தற்போது விராட் கோலி அறவே எடுத்துக் கொள்வதில்லை. உணவை சரியாக முறையில் உண்டால் மட்டுமே கிரிக்கெட்டில் வலம் வர முடியும் என்பதை உணர்ந்த விராட் கோலி அந்த பழக்கத்தை மிகுந்த அக்கறை செலுத்தி இருக்கிறார்.

- Advertisement-

அதேபோன்று விராட் கோலி கிரிக்கெட்டுக்கு தேவையான உடற்பயிற்சியை தவிர வேறு எந்த விதமான உடல் பயிற்சியிலும் ஈடுபட்டது இல்லையாம். இதனால் 2011- 12 ஆம் ஆண்டு கால கட்டத்தில் விராட் கோலிக்கு தன் உடல் பருமனாக இருந்ததை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் தீவிர உடற்பயிற்சியின் கவனம் செலுத்தினாராம்.

ஜிம்முக்கு சென்று பளு தூக்குதல் போன்ற பயிற்சி எல்லாம் விராட் கோலி பிறகு தான் செய்ய தொடங்கினார். மேலும் விராட் கோலி பார்ட்டிக்கு செல்வது மது அருந்துவது என சிறு வயதில் இருந்து குஜாலாக வாழ்ந்திருக்கிறார்.

ஆனால் தூக்கம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்ட விராட் கோலி தன்னுடைய பார்ட்டி ஸ்டைலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். எப்போது எதோ ஒரு நாள் நண்பர்கள் அழைத்தால் விராட் கோலி இப்போது செல்கிறாரே தவிர மற்ற விஷயங்களில் அவர் கண்டு கொண்டதே இல்லை.

சற்று முன்