- Advertisement 3-
Homeவிளையாட்டுபிட்சை பாத்ததும் நான் நெனச்சது இது தான்... நான் சிஎஸ்க காரங்க.. பேட்ஸ்மேனால இதை கணிக்க...

பிட்சை பாத்ததும் நான் நெனச்சது இது தான்… நான் சிஎஸ்க காரங்க.. பேட்ஸ்மேனால இதை கணிக்க முடியல – ஜடேஜா பேச்சு

- Advertisement-

சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களுக்கு 199 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது.

இந்திய அணியின் தரப்பில் ஸ்பின்னர்கள் 6 விக்கெட்டுகளையும், வேகப்பந்துவீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் 10 ஓவர்களில் வெறும் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 2 மெய்டன் ஓவர்களையும் வீசினார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

- Advertisements -

இதுகுறித்து இந்திய அணியின் ராக்ஸ்டாரான ரவீந்திர ஜடேஜா பேசும் போது, ஐபிஎல் தொடரில் நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறேன். அதனால் சேப்பாக்கம் மைதானத்தின் அனைத்து சாதக பாதகங்களும் தெரியும். இன்று நடைபெற்ற ஆட்டத்திற்கு முன்பாக பிட்சை ஒரு முறை சென்று பார்வையிட்டேன். அப்போதே என் மனதில், எளிதாக 2, 3 விக்கெட்டை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. நான் சாதாரணமாக எனது வலிமையான ஸ்டம்ப் லைனிலேயே பந்துவீசினேன். ஆனால் பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்ததால், எந்த பந்து திரும்பும், எந்த பந்து நேராக வரும் என்பதை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. நான் டர்ன் செய்த பந்துகளை, கூடுதல் வேகத்துடன் வீசினேன்.

- Advertisement-

சென்னையில் எப்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றாலும் ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு வந்து சிறப்பான ஆதரவை அளிப்பார்கள். நீண்ட நாட்களுக்கு பின் முழுமையாக மைதானம் நிரம்பியுள்ளதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை எளிமையான கிரிக்கெட் விளையாடினாலே போதுமானது.

சற்று முன்